இடுகைகள்

TET & PG TRB - TAMIL ELIGIBILITY TEST

 தேர்வு - 24 01.  வழு என்பது ...................... (அ) இலக்கண முறையுடன் பிழையின்றிப் பேசுவது (ஆ) இலக்கண முறையின்றிப் பிழையாகப் பேசுவது (இ) இலக்கண முறைப்படி பிழையுடையதை பிழையன்று என ஏற்றுக்கொள்ளப்பட்டது. (ஈ) இலக்கண முறையுடன் பிழையின்றி எழுதுவது 02.  இலக்கணப் பிழைகள் இல்லாதிருப்பது (அ) வழாநிலை (ஆ) வழு (இ) வழுவமைதி (ஈ) இவற்றில் எதுவுமில்லை 03.  “ அமைச்சர் நாளை விழாவிற்கு வருகிறார்” இத்தொடரிலுள்ள வழுவமைதி (அ) கால வழுவமைதி (ஆ) மரபு வழுவமைதி (இ) இட வழுவமைதி (ஈ) திணை வழுவமைதி 04.  படர்க்கை வினையைத் தேர்ந்தெடுக்க. (அ) வந்தாய் (ஆ) வந்தான் (இ) வந்தேன் (ஈ) வந்தீர் 05.  பொருத்துக. 1. செழியன் வந்தது  - ( அ) இட வழு 2. கண்ணகி உண்டான்  - ( ஆ) கால வழு 3. நீ வந்தேன்  - ( இ) திணை வழு 4. நேற்று வருவான்  - ( ஈ) பால் வழு (அ) 1- ஆ , 2- ஈ , 3- அ , 4- இ (ஆ)   1- இ , 2- அ , 3- ஈ , 4- ஆ (இ) 1- இ , 2- ஈ , 3- அ , 4- ஆ (ஈ) 1- இ , 2- ஈ , 3- ஆ , 4- அ 06.  பொருத்துக . 1. தன்மை  - ( அ)   அவன் 2. முன்னிலை  - ( ஆ) நான் 3. படர்க்கை  - ( இ) நீ...

TET & PG TRB - TAMIL ELIGIBILITY TEST

 தேர்வு - 23 01.  செந்தீ - பிரித்து எழுதுக. (அ) செம்+தீ (ஆ) செம்மை+தீ (இ) செந்+தீ (ஈ) சிவப்பு+தீ  02 .   பொருத்துக. 1. Nanotechnology - (அ) உயிரித் தொழில்நுட்பம் 2. Biotechnology - (ஆ) மீநுண் தொழில்நுட்பம் 3. Ultraviolet rays - (இ) அகச்சிவப்புக் கதிர்கள் 4. Infrared rays - (ஈ) புறஉதாக் கதிர்கள் (அ) 1-அ, 2-ஆ, 3-ஈ, 4- இ (ஆ) 1-ஆ, 2-அ, 3-ஈ, 4-இ (இ) 1-ஆ, 2-அ, 3-இ, 4-ஈ (ஈ) 1- இ , 2- ஈ , 3- ஆ , 4- அ 03.  பொருத்துக. 1. அழல்  - ( அ) யானை 2. உவா - ( ஆ) நெருப்பு 3. கங்குல்  - ( இ) சூரியன் 4. கனலி  - ( ஈ) இருள் (அ) 1-ஆ, 2-அ, 3-ஈ, 4- இ (ஆ) 1-இ, 2-ஈ, 3-அ, 4-ஆ (இ) 1-ஆ, 2-அ, 3-இ, 4-ஈ (ஈ) 1- இ , 2- ஈ , 3- ஆ , 4- அ 04.  பொருத்துக. 1. விசும்பு  - ( அ) குளிர்ந்த மழை 2. பீடு  - ( ஆ) வானம் 3. ஊழி  - ( இ) சிறப்பு 4. தண்பெயல் - ( ஈ) யுகம் (அ) 1-அ, 2-ஆ, 3-ஈ, 4- இ (ஆ) 1-இ, 2-ஈ, 3-அ, 4-ஆ (இ) 1-ஆ, 2-இ, 3-ஈ, 4-அ (ஈ) 1- இ , 2- ஈ , 3- ஆ , 4- அ 05.  பொருத்துக. 1. ஊழ் ஊழ்  - ( அ) ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் 2. வளர்வானம்  - (...

PG TRB - TAMIL ELIGIBILITY TEST

 தேர்வு - 22 01. அண்டப் பெருவெளியில் எண்ணற்ற பால்வீதிகள் உள்ளதற்கு எதனை உவமையாக மாணிக்கவாசகர் காட்டுகிறார் ? ( அ) இல்நுழைகதிர்     ( ஆ) கருந்துளை                      ( இ)  நட்சத்திரங்கள்    ( ஈ) சூரியன் 02. ‘ கிளர்ந்த’ என்னும் பெயரெச்சத்தின் வேர்ச்சொல் ( அ) கிளர்ந்து ( ஆ) கிள ( இ) கிளர் ( ஈ) கிளர்த்தல் 03. ' உனதருளே பார்ப்பன் அடியேனே ' என்பது ( அ) விளித்தொடர் ( ஆ) வினைமுற்றுத்தொடர் ( இ) அடுக்குத்தொடர் ( ஈ) உரிச்சொல் தொடர் 04. " வாளால் அறுத்துச் சுடினும் மருத்துவன்பால் மாளாத காதல் நோயாளன் போல் மாயத்தால்" இவ்வடிகளில் பயின்று வந்துள்ள நயங்கள் ( அ) எதுகை , மோனை ( ஆ) எதுகை , இயைபு ( இ) மோனை , இயைபு ( ஈ) எதுகை , முரண் 05. " கடும் பகட்டு யானை நெடுந்தேர்க் கோதை திரு மா வியல் நகர்க் கருவூர் முன்துறை" என்னும் அகநானூறு அடியில் வரும் கருவூர் எம்மாவட்டத்தில் உள்ளது ? ( அ) கரூர் ( ஆ) திருச்சி ( இ) நாமக்கல் ( ஈ) சேலம் 06. தற்காலத்தின் ஐன்ஸ்டைன் என்று பு...

PG TRB - TAMIL ELIGIBILITY TEST

 தேர்வு - 21 01.  அறிஞருக்கு நூல் , அறிஞரது நூல் ஆகிய சொற்றொட ர் களில் பொருளை வேறுபடுத்துக் காரணமாக   அமைவது (அ) வேற்றுமை உருபு (ஆ) எழுவாய் (இ) உவம உருபு (ஈ) உரிச்சொல் 02.  காசிக்காண்டம் என்பது (அ) காசி நகரத்தின் வரலாற்றைப் பாடும் நூல் (ஆ) காசி நகரத்தைக் குறிக்கும் மறுபெய ர் (இ) காசி நகரத்தின் பெருமையைப் பாடும் நூல் (ஈ) காசி நதரத்திற்கு வழிப்படுத்தும் நூல் 03.  ‘ விருந்தினரைப் பேணுவதற்குப் பொருள் தேவைப்பட்டதால் , தன் கருங்கோட்டுச்  சீறியாழைப் பணையம் வைத்து விருந்தளித்தான் என்கிறது புறநானூறு’. இச்செய்தி  உண ர் த்தும் விருந்து போற்றிய நிலை (அ) நிலத்திற்கேற்ற விருந்து (ஆ) இன்மையிலும் விருந்து (இ) அல்லிலும் விருந்து (ஈ) உற்றாரின் விருந்து 04.  ‘Modern literature’ என்னும் ஆங்கிலச்சொல்லுக்கான தமிழ்ச்சொல் தருக. (அ) வட்டார இலக்கியம் (ஆ) நாட்டுப்புற இலக்கியம் (இ) நவீன இலக்கியம் (ஈ) பண்டைய இலக்கியம் 05. கொற்கைத் துறைமுகம் ................. நாட்டில் அமைந்துள்ளது. (அ) சேர (ஆ) சோழ (இ) பாண்டிய (ஈ) பல்லவ 06.  கூற்று: சீன நாட்டு பண்டைய துறைமுகமான ச...

PG TRB - TAMIL ELIGIBILITY TEST

 தேர்வு - 20 01. விடுபட்ட உணவு வரிசைகளை வரிசைப்படுத்துக. பச்சரியைக் கொண்டு ................. செய்து பாசிப்பருப்பினை வறுத்து .................. பிடித்து கேரட்டைத்  துருவி நெய்யிட்டு ............. செய்து முடித்த அம்மா, இறுதியாக உருளைக் கிழங்கைச் சீவி ................ செய்து அனைவரையும் உணவு உண்ண அழைத்தார். (அ) பொங்கல், உருண்டை, சீவல், அல்வா (ஆ) சீவல், உருண்டை, பொங்கல், அல்வா (இ) பொங்கல், உருண்டை, அல்வா, சீவல் (ஈ) உருண்டை, சீவல், அல்வா, பொங்கல் 02.  கண்ணோட்டம் என்னும் சொல்லின் பொருள் (அ) கவனித்தல் (ஆ) உற்றுநோக்கல் (இ) இரக்கம் (ஈ) விடாமுயற்சி 03.  பொருத்துக. 1. குறள் - (அ) போற்றி 2.  ஊழ் - (ஆ) செல்வம் 3. திரு - (இ) இரண்டடி வெண்பா 4. பேணி - (ஈ) முன்வினை (அ) 1-ஈ, 2-இ, 3-ஆ, 4-அ (ஆ)  1-இ, 2-ஈ, 3-ஆ, 4-அ (இ) 1-அ, 2- ஈ , 3-இ, 4-ஆ  (ஈ)  1-ஈ, 2-இ, 3-அ, 4-ஆ 04. பொருத்துக. 1. தேடித்தேடி - (அ) வேற்றுமைத் தொகாநிலைத்தொடர் 2. தெரிந்த நபர் - (ஆ) வினைமுற்றுத் தொடர் 3. வளர்ந்தது தமிழ்  - (இ) பெயரெச்சத்தொடர் 4. ஊரின்கண் நீங்கி...

PG TRB - TAMIL ELIGIBILITY TEST

 தேர்வு - 19 01. அன்பால் கட்டினார் என்பது ................... (அ) மூன்றாம் வேற்றுமைத்தொகைநிலைத்தொடர் (ஆ) நான்காம் வேற்றுமைத்தொகைநிலைத்தொடர் (இ) மூன்றாம் வேற்றுமைத் தொகாநிலைத்தொடர் (ஈ) நான்காம் வேற்றுமைத் தொகாநிலைத்தொடர் 02.  பின்வருவனவற்றில் கூட்டுநிலைப் பெயரெச்சத்தைத் தெரிவு செய்க. (அ) கேட்க வேண்டிய பாடல் (ஆ) கேட்ட பாடல் (இ) சொன்ன செய்தி (ஈ) சொல்லிச் சென்றான் 03.  கி.ராஜநாராயணன் குறித்த கூற்றுகளில் எவை சரியானவை 1. கரிசல் எழுத்தாளர். 2. கரிசல் இலக்கியத்தை இவர்தான் முதன்முதலில் எழுதத் தொடங்கினார். 3. இவர் கரிசல் வட்டாரச் சொல்லகராதி ஒன்றை உருவாக்கியுள்ளார். (அ) 1, 2, 3 சரியானவை (ஆ) 1, 2, 3 தவறானவை (இ)  1, 3 சரியானவை, 2 தவறு (ஈ) 1, 2 சரியானவை, 3 தவறு 04.  அசைஇ என்பது ............... (அ) இன்னிசை அளபெடை (ஆ) செய்யுளிசை அளபெடை (இ) இசைநிறை அளபெடை (ஈ) சொல்லிசை அளபெடை 05.  கூத்தராற்றுப்படையின் பாட்டுடைத் தலைவன் யார்? (அ) பெருங்கௌசிகனார் (ஆ) நன்னன் (இ) கூத்தர் (ஈ) குலேச பாண்டியன் 06.  பின்வருவனவற்றில் பொருந்தாத ஒன்றைத் தெரிவு செய்க. (அ) வியத்தல் – பலர்பால் வினைமு...