செவ்வாய், 12 ஜூலை, 2022

பள்ளி - காலை வணக்கக் கூட்ட செயல்பாடுகள் - 21-11-2022, திங்கள்

 21-11-2022, திங்கள்

திருக்குறள்

பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்

பற்றுக பற்று விடற்கு

பொருள் 

பற்றில்லாதவனுடைய பற்றப் பற்ற வேண்டும். மற்ற பற்றுகளை விட்டொழிப்பதற்கு அப்பற்றைப் பற்ற வேண்டும்.

பழமொழி 

There is danger in men's smile

நம்மை வணங்கும் கைகளிலும் பகை ஒளிந்திருக்கும்.

பொன்மொழி

சொல்லில் இனிமை இருந்தால் வேப்ப எண்ணையை கூட விற்று விடலாம். சொல்லில் கடுமை இருந்தால் தேன் கூட விற்க முடியாது.


பொது அறிவு

யூனியன் பிரதேசங்கள் யாருடைய ஆளுகைக்கு உட்பட்டது?

குடியரசுத்தலைவர்.


இன்றைய செய்திகள்

  • வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுநிலை, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. இந்திய வானிலை மையம் அறிவிப்பு.

  • திருவண்ணாமலையில் டிசம்பர் - 6 இல் கார்த்திகை தீபத்திருவிழா. தலைமைச் செயலாளர் ஆலோசனை.

  • தமிழ் மொழியைக் காக்க வேண்டியது இந்திய மக்கள் அனைவரின் கடமை. காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்வில் பிரதமர் மோடி பேச்சு.

  • பாரதியார் பிறந்தநாளை தேசிய மொழிகள் தினமாக அறிவிக்கிறது மத்திய அரசு. வாரணாசியினல் பாரதியாருக்கு நினைவிடமும் அமைக்கிறது.

  • நியுசிலாந்துக்கு எதிரான இரண்டாவது T20 போட்டியில் இந்தியா அபார வெற்றி.
Today headlines

  • Multiple Electricity Connection Holders Can Link Same Aadhaar Number: Electricity Authority Explanation

  • Archeology Minister Thangam Thennarasu said that the ongoing excavations on behalf of the Tamil Nadu government are providing new data and information to history.

  • Central Govt declares Bharathi's birthday as National Languages ​​Day: Plans to build Bharati Memorial in Varanasi

  • It has been announced that the Winter Session of Parliament will begin on December 7.

  • 2nd T20I - India win by beating New Zealand easily.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக