22.11.2022, செவ்வாய்
திருக்குறள்
வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
தீமை இலாத சொலல்
பொருள்
உண்மை எனச் சொல்லப்படுவது எது என்றால் மற்றவர்க்குச் சிறிதும் தீமையில்லாத சொற்களைப் பேசுவதே ஆகும்.
பழமொழி
Hear more, But talk less.
அதிகம் கேள், குறைவாகப் பேசு.
பொன்மொழி
நேரம் விலைமதிப்பற்றது. உண்மை நேரத்தை விட அதிக விலை மதிப்பற்றது. - பெஞ்சமின்.
பொது அறிவு
வயிறு இல்லாத உயிரினம் எது?
ஈசல்
இன்றைய செய்திகள்
- தமிழகம் முழுவதும் நாளொன்றுக்கு 4000 முதல் 4500 பேருக்கு 'மெட்ராஸ் ஐ' பாதிப்பு.
- தமிழகத்தின் 6 மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- 2030-க்குள் மனிதர்கள் நிலவில் வாழலாம், பணி செய்யலாம் என நாசா தெரிவித்துள்ளது.
- ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் - சாம்பியன் பட்டம் வென்றார் ஜோகோவிச்.
- Every day 4000 to 4500 people are affected by 'Madras Eye' across Tamil Nadu.
- Chennai Meteorological Center has informed that there is a possibility of heavy rain in 6 districts of Tamil Nadu today and tomorrow.
- NASA says humans could live and work on the moon by 2030.
- Men's Tennis Championship - Jokovic wins the title.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக