புதன், 23 நவம்பர், 2022

பள்ளி - காலை வணக்கக் கூட்ட செயல்பாடுகள் - 23.11.2022, புதன்

 23.11.2022, புதன்

திருக்குறள்

ஏவவும்   செய்கலான்   தான்தேறான்   அவ்வுயிர்

போஒம்    அளவும்ஓர் நோய்  

பொருள்

சொன்னாலும் செய்யாமல், தானாகவும் செய்யாமல் இருப்பவன் உயிர், சாகும் வரை உள்ள நோய் ஆகும்.

பழமொழி

Nothing so bad but it might have been worse.

தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போயிற்று.

பொன்மொழி 

உங்களிடம் உள்ள மிகவும் விலைமதிப்பற்ற செல்வம் நேரமாகும். 

- ஸ்டீவ் ஜாப்ஸ்

பொதுஅறிவு

நோபல் பரிசினை வென்ற முதல் ஆசிய நாடு எது?

இந்தியா

இன்றைய செய்திகள்

மதுரை மாவட்டத்தில், அரிட்டாபட்டி மற்றும் மீனாட்சிபுரம் கிராமங்களிலுள்ள 193.215 ஹெக்டேர் பரப்பிலான பகுதியை அரிட்டாபட்டி பல்லுயிர் பாரம்பரியத் தலமாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இது மாநிலத்தின் முதல் பல்லுயிர் பாரம்பரியத் தலமாகும்.

 

அரசு மருத்துவமனைகளில் செய்யப்படும் அறுவை சிகிச்சைகளுக்கான புதிய வழிகாட்டுதல்கள் வழங்கப்படும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

 

ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்டத்தில் அங்கன்வாடி மையங்களில் உள்ள குழந்தைகளுக்கு, இந்த மாதம் முதல் வாரம் 3 முட்டை, சத்துமாவு மற்றும் செறிவூட்டப்பட்ட பிஸ்கெட்கள் வழங்குவதற்கான அரசாணை வெளியிப்பட்டுள்ளது.

 

2024 டி20 உலகக்கோப்பை தொடரை அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

 

Today headlines

 

The Tamil Nadu government has declared an area of ​​193.215 hectares in Aritapatti and Meenakshipuram villages in Madurai district as Aritapatti Biodiversity Heritage Site.  It is the first Biodiversity Heritage Site in the state.

 

Health Minister Mr.M. Subramanian has said that new guidelines will be issued for surgeries performed in government hospitals.

 

An order has been issued to provide 3 eggs, energy flour and enriched biscuits to children in Anganwadi centers in the Integrated Child Development Scheme from the first week of this month.

 

It has been decided to host the 2024 T20 World Cup in the USA and West Indies.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக