புதன், 23 நவம்பர், 2022

பள்ளி - காலை வணக்கக் கூட்ட செயல்பாடுகள் - 24.11.2022, வியாழன்

 22.11.2022, வியாழன்.

திருக்குறள்

எவ்வது உறைவது உலகம் உலகத்தோடு

அவ்வது உறைவது அறிவு.

பொருள்

உலகம் எவ்வாறு நடைபெறுகின்றதோ, உலகத்தோடு பொருந்திய வகையில் தானும் அவ்வாறு நடப்பது அறிவாகும்.

பழமொழி

When you obey the superior, you instruct your inferior.

முன் ஏர் போன வழியே தான் பின் ஏர் போகும்.

பொன்மொழி

நேரம் என்பது ஒரு சிறந்த எழுத்தாளர். அது எப்போதும் சரியான முடிவையே எழுதுகிறது. - சார்லி சாப்ளின்

பொதுஅறிவு

வியாபார நகர் என அழைக்கப்படும் மாவட்டம் எது?

விருதுநகர்.

இன்றைய செய்திகள்

மாற்றுத் திறனாளிகள் குழந்தைகளுக்கு அனைத்து சேவைகள் கிடைப்பதைக் கண்காணிக்க குழுக்கள் அமைப்பு. தமிழக அரசு அரசாணை வெளியீடு.


கடந்த ஆண்டைக் காட்டிலும் நடப்பு ஆண்டில் ஒரு லட்சம் விவசாயிகள் கூடுதலாக பயிர்க் காப்பீடு செய்துள்ளனர். தமிழக அரசு தகவல்.


சென்னைத் தீவுத்திடலில் டிசம்பர் மாத இறுதியில் சுற்றுலா பொருட்காட்சி நடைபெற உள்ளது.


திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா அம்மன் உற்சவத்துடன் தொடங்கியது. டிசம்பர் 6 இல் மகாதீபம் ஏற்றப்படுகிறது.

Today Headlines

HC Orders the sealing of resorts with artificial waterfalls in 5 districts

 

Minister M. Subramanian said that 2000 doctors have registered to participate in the International Medical Conference being held on the occasion of the centenary of the Department of Public Health.

 

The Tamil Nadu government has issued an order to provide Rs. 1000 each to the rain-affected families in the Mayiladuthurai district. The government has allocateda fund of Rs.16 crore for this purpose.

 

In the first phase, 13,000 Tamil inscription steps were brought

 

Changes will be applied in the 2024 World Cup cricket format

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக