ஞாயிறு, 27 நவம்பர், 2022

பள்ளி - காலை வணக்கக் கூட்ட செயல்பாடுகள் - 28.11.2022, திங்கள்

 28.11.2022, திங்கள்.

திருக்குறள்

கற்க கசடற கற்பவை கற்றபின்

நிற்க அதற்குத் தக.

பொருள்

கற்க வேண்டிய நூல்களைக் குற்றமில்லாமல் கற்க வேண்டும். கற்றபின் அதன்படி நடந்து கொள்ள வேண்டும்.

பழமொழி

Aspiring people are inspiring people.

ஆர்வம் உடையோரே ஆர்வத்தைத் தூண்ட முடியும். 

பொன்மொழி

நாம் சிலரை வெறுக்க காரணம், அவர்களை சரியாக புரிந்துகொள்ளாததே. சரியாக புரிந்துகொள்ளாததற்கு காரணம் அவர்கள் மீதான வெறுப்பு. 

- ஸ்பானிஷ் அறிஞர்.

பொதுஅறிவு

எந்த ஆண்டு திருக்குறள் முதன் முதலில் அச்சிடப்பட்டது?

1812.

இன்றைய முக்கியச் செய்திகள்

 * அறிவியல் மனப்பான்மையை 6 முதல் 8 வரை உள்ள அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களிடம் மேம்படுத்த 'வானவில் மன்றம்' : முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.


* மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க நாளை  முதல் 2811 மின்வாரிய அலுவலகங்களில்  சிறப்பு முகாம்.


* ஜி - 20 நாடுகளின் தலைமைப் பதவியை ஏற்றது இந்தியாவுக்கு கிடைத்த பெருமை. மனக் குரலில் பிரதமர் மோடி உரை.


* திருவண்ணாமலையில் அண்ணாமலையார் கோவில் கார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.


* காற்று மாசு உக்கிரம். டெல்லியில் கடும் பனி மூட்டம். மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு.


* உலகக் கோப்பை கால்பந்தில் முதல் அணியாக அடுத்து சுற்றுக்கு முன்னேறியது பிரான்ஸ்.

Today headlines

* Kanyakumari is crowded with tourists during the Sabarimala season.  In the morning they gathered on the beach and enjoyed the sunrise.

 

*  Chennai Meteorological Center has said that light to moderate rain may occur at a few places in Tamil Nadu from today for the next 3 days.

 

 * Rainbow forum' to develop scientific attitude among students in 6th to 8th government schools: Chief Minister M.K.Stalin inaugurates.

 

* A permanent footpath for the disabled is coming into use today Developed under the 'Singara Chennai 2.0' project at the Marina.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக