பள்ளி - காலை வணக்கக் கூட்ட செயல்பாடுகள் - 29.11.2022, செவ்வாய்

29.11.2022, செவ்வாய்

திருக்குறள்

அறனீனும் இன்பமும் ஈனும் திறனறிந்து

தீதின்றி வந்த பொருள்

பொருள்

முறையறிந்து தீமையற்ற வழியில் சேர்த்த பொருள் ஒருவருக்கு அறத்தையும் தரும், இன்பத்தையும் தரும்.

பழமொழி

No pain; No gain.

உழைப்பின்றி ஊதியம் இல்லை.

பொன்மொழி

சொந்த காரியம், பொதுக்காரியம் அனைத்தையும் நியாயமாகவும் பெருந்தன்மையாகவும் செய்யக் கற்றுத் தருவதே கல்வி. - மில்டன்.

பொது அறிவு

செல்போனின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?

மார்ட்டின் கூப்பர்

இன்றைய முக்கியச் செய்திகள்

* அறிவியல், கணிதப் பாடங்களை எளிதாக கற்க 13,210 அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 'வானவில் மன்றம்' திட்டம்: திருச்சியில் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

 

* அரசுப் பள்ளிகளில் கலைத்திருவிழா. பல்வேறு போட்டிகளில் மொத்தம் 25 இலட்சம் மாணவர்கள் பங்கேற்பு.

 

* தமிழகத்தில் டிசம்பர் 15 ஆம் தேதி அரையாண்டுத் தேர்வுகள் தொடக்கம். மாநிலம் முழுவதும் ஒரே வினாத்தாளைப் பின்பற்ற திட்டம்.

 

* 15 ஆண்டுகளுக்கு மேலாகப் பயன்பாட்டில் இருக்கும் மத்திய மற்றும் மாநில அரசுகளின் வாகனங்கள் 2023 ஏப்ரல் முதல் அழிக்கப்படும் என்றும் மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்

 

* இந்திய ஒலிம்பிக் சங்க முதல் பெண் தலைவராக தங்க மங்கை பி.டி. உஷா போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார்.

 

* உலகக்கோப்பை கால்பந்து: ஸ்பெயின் , ஜெர்மனி அணிகளின் ஆட்டம் சமனில் முடிந்தது.

 

Today's Headlines

 

* 'Rainbow Forum' Scheme for Government School Students: Launched by Chief Minister Stalin in Trichy.

 

 *  Due to heavy fog in Chennai, Muscat, Kuwait and Pune flights were diverted to Bangalore and Hyrabad.

 

*  Time Table Released for Govt School Teachers Transfer Consultation: The consultation starts from tomorrow.

  

 * Thanga Mangai P.D. is the first woman president of the Indian Olympic Association.  Usha is elected unopposed.

 

*  World Cup Football: The match between Spain and Germany ended in a draw.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பத்தாம் வகுப்பு - தமிழ்

பத்தாம் வகுப்பு - தமிழ்