மகாவீரரின் போதனைகள் குறித்த இணையவழி போட்டி
6 முதல் பிளஸ் 2 வரையுள்ள மாணவர்கள் பங்கேற்கலாம்.
பகவான் மஹாவீர் அறக்கட்டளை சார்பில் பள்ளி மாணவர்களுக்கு மகாவீரரின் போதனைகள் குறித்த இணையவழிப் போட்டி நடத்தப்பட உள்ளது. இதில் வெற்றி பெறுவோருக்கு ரொக்கப்பரிசுகள் வழங்கப்படும்.
இது தொடர்பாக பகவான் மகாவீரர் அறக்கட்டளை நிறுவனர் என்.சுகல்சந்த் ஜெயின் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
மகாவீரரின் போதனைகளை பள்ளி மாணவர்களிடம் கொண்டு செல்லும் வகையில் இந்த இணையவழிப் போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இப்போட்டிகள் நவம்பர் 22 முதல் 30 ஆம் தேதி வரை தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளில் நடத்தப்படும். 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை, 9 முதல் பிளஸ் 2 வரை என இரு பிரிவுகளாக போட்டி நடைபெறும்.
இதில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் https://mahaveer-award-for-essays.conductexam.com என்ற இணையதளத்தில் பதிவு செய்து தேர்வு எழுதலாம். அல்லது பிளே ஸ்டோரில் இருந்து 'மகாவீர் அவார்ட் ஃபார் எஸ்ஸேய்ஸ்' (Mahaveer Award for Essays) என்ற மொபைல் செயலியை பதிவிறக்கம் செய்து, மொபைல் போன் மூலம் தேர்வெழுதலாம்.
'மகாவீரரின் போதனைகள் மற்றும் வாழ்க்கை' என்ற தலைப்பில் 50 கேள்விகள் கேட்கப்படும். ஒவ்வொரு கேள்விக்கும் 4 பதில்கள் கொடுக்கப்படும். அவற்றில் சரியான பதிலைத் தேர்வு செய்ய வேண்டும். இதற்கு 60 நிமிடங்கள் கொடுக்கப்படும்.
போட்டியில் வெற்றிபெறும் மாணவர்களுக்கு ரூபாய் 1000 முதல் ரூபாய் 15000 வரையில் ரொக்கப் பரிசுகள் வழங்கப்படும்.தமிழ், ஆங்கிலப் போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு தனித்தனியே பரிசுகள் உண்டு. இணையவழித் தேர்வுக்குத் தேவையான புத்தகங்களை www.bmfawards.org என்ற இணையதளத்தில் இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
கூடுதல் விவரங்களுக்கு 99620 11605, 99623 40367 ஆகிய செல்போன் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக