பள்ளி - காலை வணக்கக் கூட்ட செயல்பாடுகள் - 02.12.2022, வெள்ளி
02.12.2022, வெள்ளி
திருக்குறள்
எனைத்தானும் நல்லவை கேட்ட அனைத்தானும்
ஆன்ற பெருமை தரும்.
பொருள்
எவ்வளவு சிறிதானாலும் நல்லவற்றைக் கேட்டால், கேட்ட அளவுக்குப் பெருமை உண்டாகும்.
Money Makes many things
பணம் பத்தும் செய்யும்.
பொன்மொழி
பொதுவாழ்வில் எரிமலை, அலைகடல், பூகம்பம், தீ எல்லாம் உண்டு. அவற்றால் பாதிக்கப்படாமல் இருக்க சக்தியைப் பெற வழிதேடு! ஓடாதே!
- அறிஞர் அண்ணா.
பொதுஅறிவு
தெற்கு ஆசியாவின் சாக்ரடீஸ் என்று புகழப்படுபவர் யார்?
பெரியார்.
இன்றைய முக்கியச் செய்திகள்
* ஜீ 20 தலைமைப் பொறுப்பை இந்தியா முறைப்படி 01.12.2022 முதல் ஏற்றுக்கொண்டது. இதை முன்னிட்டு தஞ்சை பெரிய கோவில் உட்பட 100 நினைவுச்சின்னங்கள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டன.
* அரசு கல்லூரிகளில் கூடுதலாக 1895 கவுரவ விரிவுரையாளர் பணியிடங்கள். அனுமதி வழங்கி அரசாணை வெளியானது.
* அரசு அலுவலகங்களில் வழங்கப்படும் ரசீதுகளில் தமிழில் தகவல் தெரிவிக்க வேண்டும். தமிழக அரசு உத்தரவு.
* தமிழகத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்பு! சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.
* தமிழ்மொழி இலக்கியத் திறனறித் தேர்வு முடிவுகள் வெளியீடு. அரசுப் பள்ளி மாணவர்கள் 967 ஊக்கத்தொகை பெறுவதற்கு தேர்வு.
Today
Headlines
* The TN government informed the High court
that a 10 people group is organised under the director of Tourism to
investigate and punish the people who made artificial falls in western ghats
* In PM's Crop
Insurance scheme farmers are requested to insure the winter crops by TN
Agricultural and Farmers Welfare Department
* In Chennai Anna
University the TN government planned to construct a Information Technology
Center - by Information and Technology Minister Mano Thangaraj.
* To buy 1,000 new
buses for TN Transport Corporation government issued a GO to allocate 420 crore
rupees.
கருத்துகள்
கருத்துரையிடுக