பள்ளி - காலை வணக்கக் கூட்ட செயல்பாடுகள் - 05.12.2022, திங்கள்

05.12.2022, திங்கள்

திருக்குறள்

செயற்கை அறிந்தக் கடைத்தும் உலகத்
தியற்கை அறிந்து செயல்

பொருள்

ஒரு செயலைச் செய்வதற்குரிய முறைகளை நூல்வழியாக அறிந்திருப்பினும் உலகியல் நடைமுறைகளை அறிந்து செயல்பட வேண்டும்.

பழமொழி

Laughter is the best medicine
வாய்விட்டுச் சிரித்தால் நோய்விட்டுப் போகும்.

பொன்மொழி

குறை சொன்னது யார் என்று இரண்டாவதாக பார்.
சொல்லப்பட்ட குறை உன்னிடம் உள்ளதா என்பதை முதலில் பார்.

பொதுஅறிவு

இந்தியாவின் ஷேக்ஸ்பியர் என்று அழைக்கப்படுபவர் யார்?

காளிதாசர்

இன்றைய முக்கியச் செய்திகள்

* ஜி 20 இந்தியா தலைமையில் இன்று முதலாவது கூட்டம். ராஜஸ்தான் உதய்பூரில் நடைபெறுகிறது.

* மாற்றுத்திறனாளிக்கு ஓய்வூதியம் உயர்வு. மாதம் ரூபாய் 1500. தமிழக முதல்வர் அறிவிப்பு.

* தீபத்திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலையில் பக்தர்கள் குவிந்தனர். நாளை மகாதீபம் ஏற்றப்படுகிறது. பாதுகாப்புப் பணியில் காவல்துறை.

* புதிய காற்றழுத்த பகுதி இன்று உருவாகிறது. வானிலை ஆய்வு மையம் தகவல்.

* இந்தியா - வங்கதேசம் முதல் ஒரு நாள் மட்டைப்பந்து போட்டி. வங்கதேசம் வெற்றி.

Today's Headlines

 * A consultative meeting regarding the G-20 summit will be held tomorrow under the chairmanship of Prime Minister Modi.  Tamil Nadu Chief Minister Stalin is going to Delhi tomorrow to participate in it.

 

 *  Tamil Nadu Chief Minister Stalin has announced that the pension for 4 lakh 39,315 people, including the blind and differently abled, will be increased from Rs.1,000 to Rs.1,500.

 

 * According to the Meteorological Department, there is a possibility of heavy rain in Tamil Nadu from the 7th due to a new low pressure area forming near the Andamans.

 

 * Cooperatives, Food and Consumer Protection Department Secretary J. Radhakrishnan said that even if the family card holders do not link the bank account with the ration card, the supply of goods will not be stopped.

 

 * Hockey series against India: Australia won 4-1.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பத்தாம் வகுப்பு - தமிழ்

பத்தாம் வகுப்பு - தமிழ்