பள்ளி - காலை வணக்கக் கூட்ட செயல்பாடுகள் - 06.12.2022, செவ்வாய்
06.12.2022, செவ்வாய்
திருக்குறள்
மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து
நோக்கக் குழையும் விருந்து
பொருள்
மோந்து பார்த்தால் அனிச்ச மலர் வாடிவிடும். நம் முகம் மாறினாலே விருந்தினர் உள்ளம் வாடிவிடும்.
பழமொழி
Great engines turn on small pivots
அச்சில்லாமல் தேர் ஓடுமா?
பொன்மொழி
நம்முடைய சோதனைகள், துக்கங்கள் மற்றும் வருத்தங்கள் ஆகியவையே நம்மை வளரச் செய்கின்றன. - ஒரிசன் மார்டென்.
பொதுஅறிவு
இந்தியாவின் முதல் பெண் கவர்னர் யார்?
சரோஜினி நாயுடு
இன்றைய முக்கியச் செய்திகள்
► சென்னை காலநிலை மாற்ற
செயல் திட்டத்தின் இறுதி வரைவு அறிக்கை இரண்டு மாதங்களில் வெளியாகும் என்று சென்னை
ஸ்மார்ட் சிட்டி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
► காற்றழுத்த
தாழ்வுப் பகுதி காரணமாக 8-ம் தேதி தமிழகத்தின் சில இடங்களில்
ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்து சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
வெளியிட்டுள்ளது.
► வில்லிவாக்கம் ஏரியில் ரூ.8 கோடி செலவில்
கண்ணாடி தொங்கு பாலம்: அடுத்த ஆண்டு மே மாதம் பயன்பாட்டுக்கு வருகிறது.
► பஞ்சாபில் வானில் பறக்க
ஆசைப்பட்டு விமான மாடல்களை உருவாக்கி மாணவர்களுக்கு தொழில்நுட்பத்தை கற்றுத்
தரும் விவசாயி.
உலகக்
கோப்பை கால்பந்து போட்டியில் பிரான்ஸ் அணி கால்இறுதிக்குள் நுழைந்தது.
► 19 வயதுக்கு
உட்பட்ட பெண்கள் டி20 உலகக்கோப்பை: இந்திய அணிக்கு தலைமை
தாங்குகிறார் ஷபாலி வர்மா.
Today's
Headlines
► Chennai Smart City officials have
said that the final draft report of the Chennai Climate Change Action Plan will
be out in two months.
► Chennai Meteorological
Department has issued a red alert warning in some places of Tamil Nadu on the
8th due to low-pressure areas.
►Glass suspension bridge at
Villivakkam Lake at a cost of Rs 8 crore: It will be commissioned in May next
year.
► A farmer in Punjab who aspires to
fly in the sky builds model airplanes and teaches technology to students.
► France entered the
quarter-finals of the World Cup football tournament.
►Women's Under-19 T20 World Cup:
Shabali Verma to lead the Indian team.
கருத்துகள்
கருத்துரையிடுக