பள்ளி - காலை வணக்கக் கூட்ட செயல்பாடுகள் - 07.12.2022, புதன்

 07.12.2022, புதன்

திருக்குறள்

தெரிந்த   இனத்தொடு   தேர்ந்துஎண்ணிச்   செய்வார்க்கு

அரும்பொருள்   யாதொன்றும்   இல்

பொருள்

ஆராய்ந்து சேர்ந்த இனத்துடன் நன்றாகத் தேர்ந்து, தாமும் எண்ணிப் பார்த்துச் செய்கின்றவர்க்கு அரிய பொருள்  ஒன்றுமில்லை.

பழமொழி

A Guilty conscience Needs no Accuser.

குற்றமுள்ள நெஞ்சம் குறுகுறுக்கும்.

பொன்மொழி

முக்கியமான நேரத்தில் முடிவெடுக்காமல் இருந்தால் நம் வாழ்க்கையும் முடியும்.

- மார்ட்டின் லூதர் கிங்.

பொதுஅறிவு

இந்தியாவின் பழமையான நீர் மேலாண்மைத் திட்டம் எது?

கரிகாலனின் கல்லணை.

இன்றைய முக்கியச் செய்திகள்

  • தீபத்திருவிழாவால் விழாக்கோலம் பூண்ட திருவண்ணாமலை. 2,668 அடி உயரம் கொண்ட அண்ணாமலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்பட்டது. 

  • நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடர் டிசம்பர் 7 ஆம் தேதி தொடங்கி 29 ஆம் தேதி முடியும்.

  • புயல் சின்னம் வலுப்பெற்றது. டிசம்பர் 8 ஆம் தேதி மிக மிக கன மழை பெய்யும். கடலோர மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை.

  • வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்வதற்கு டிசம்பர் 8 கடைசி நாள்.

  • உலகக் கோப்பை கால்பந்து. ஜப்பானை வென்று காலிறுதிக்கு முன்னேறியது குரோசியா.

Today's Headlines

* Adaptive traffic signal: Intelligent traffic scheme coming to reduce congestion in Chennai.

 

* The Tamil Nadu Public Service Commission has announced that the Group-3A examinations will be conducted at the examination centers in 15 districts of Tamil Nadu.

 

* The meeting of representatives from G20 member countries began in Udaipur, Rajasthan.  On the first day of the meeting, discussions were held on important issues including technology transfer.

 

* India has backed up its bid to host the 2027 Asian Cup football tournament.

 



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பத்தாம் வகுப்பு - தமிழ்

பத்தாம் வகுப்பு - தமிழ்