பள்ளி - காலை வணக்கக் கூட்ட செயல்பாடுகள் - 08.12.2022, வியாழன்
08.12.2022, வியாழன்
திருக்குறள்
தக்கார் தகவிலர் என்பது அவரவர்
எச்சத்தால் காணப் படும்.
பொருள்
நடுவு நிலைமை உடையவர், நடுவு நிலைமை இல்லாதவர் என்பது அவரவருக்குப் பின் எஞ்சி நிற்கும் புகழினாலும் பழியினாலும் அறியப்படும்.
பழமொழி
A Cat may look at a king.
யானைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கும் ஒரு காலம் வரும்.
பொன்மொழி
வெற்றி எனும் உயரத்தை அடைய ஏணியாக இருக்கும் ஆயுதம் தான் தன்னம்பிக்கை. அதை எப்போதும் வளர்த்துக்கொள்.
பொதுஅறிவு
ஆசியாவின் மிகப்பெரிய பட்டாம்பூச்சி பூங்கா எங்குள்ளது?
திருச்சி
இன்றைய முக்கியச் செய்திகள்
► சென்னையை நோக்கி வேகமாக வரும் மாண்டஸ் புயல்! இன்று முதல் 3 நாட்களுக்கு தமிழகத்தில் அதி கனமழை பெய்யும்.
► ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் சிறுபான்மை மாணவர்களுக்கு மீண்டும் கல்வி உதவித்தொகை வழங்க தமிழக முதலமைச்சர், பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
► மேட்டூர் அணையின் நீர்மட்டம் நடப்பு ஆண்டில் 3 வது முறையாக முழு கொள்ளவான 120 அடியை எட்டியது.
► பாதிக்கப்படும் உயிரினங்களை மீட்பதற்கான ஐ.நா வின் பல்லுயிர் பாதுகாப்பு உச்சி மாநாடு கனடாவில் நடக்கிறது்.
► இந்தியா - வங்காளதேசம் நாடுகளுக்கிடையே நடைபெற்ற இரண்டாவது மட்டைப்பந்து போட்டியில் வங்கதேசம் வெற்றி பெற்றது.
Today's Headlines
►
Mandus
storm coming fast towards Chennai! Tamil Nadu will receive heavy rain for 3
days from today.
► The Chief
Minister of Tamil Nadu has written a letter to the Prime Minister to re-provide
scholarships to minority students studying in classes I to VIII.
► The water level
of Mettur Dam reached the full capacity of 120 feet for the 3rd time this year.
► The United Nations
Biodiversity Summit to save endangered species is being held in Canada.
► Bangladesh won
the second India-Bangladesh cricket match.
கருத்துகள்
கருத்துரையிடுக