பள்ளி - காலை வணக்கக் கூட்ட செயல்பாடுகள் - 12.12.2022, திங்கள்
12.12.2022, திங்கள்
திருக்குறள்
விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல்
கற்றாரோடு ஏனை யவர்
பொருள்
கற்றவர்க்கும் கல்லாதவர்க்கும் இடையே உள்ள வேறுபாடானது, மக்களுக்கும் விலங்குகளுக்கும் இடையே உள்ள வேறுபாட்டிற்கு இணையானது.
பழமொழி
Every tide has its ebb.
ஏற்றம் உண்டானால் இறக்கம் உண்டு
பொன்மொழி
தனிமையாக இருக்கும்போது
வேலையின்றி சும்மா இருக்காதே!
வேலையின்றி சும்மா இருக்கும்போது
தனிமையாக இருக்காதே! - சாமுவேல் ஜான்சன்
பொதுஅறிவு
பாரதியாருக்கு மகாகவி பட்டம் கொடுத்தவர் யார்?
வ.ராமசாமி
இன்றைய முக்கியச் செய்திகள்
* வாரணாசியில் பாரதியார் இல்லத்தையும் அவருடைய சிலையையும் திறந்து வைத்தார் தமிழக முதலமைச்சர்.
* மாண்டஸ் புயலைத் தொடர்ந்து வங்கக் கடலில் மீண்டும் புதிதாக புயல் சின்னம். வானிலை ஆய்வாளர்கள் எச்சரிக்கை.
* பலத்த மழை காரணமாக பாடநூல் சேதமடைந்த மாணவர்களுக்கு, புதிதாக பாடநூல் வழங்க நடவடிக்கை. பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் தகவல்.
* வாக்காளர் பட்டியலில் திருத்தம். 23 லட்சம் பேர் விண்ணப்பம். ஜனவரி 5-இல் இறுதி பட்டியல்.
* உலகக் கோப்பை கால்பந்து போட்டி. அரை இறுதி சுற்றுக்கு முன்னேறியது பிரேசில் அணி.
Today's Headlines
* Tamil Nadu Chief Minister inaugurated Bharatiyar House and statue
in Varanasi.
கருத்துகள்
கருத்துரையிடுக