பள்ளி - காலை வணக்கக் கூட்ட செயல்பாடுகள் - 13.12.2022, செவ்வாய்
திருக்குறள்
சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்துஒருபால்
கோடாமை சான்றோர்க்கு அணி
விளக்கம்
துலாக்கோல் போல சரியாகச் செயல்படுவதே சான்றோர்க்கு அழகாகும்.
பழமொழி
Do Well What you have to do.
செய்வன திருந்தச் செய்.
பொன்மொழி
பொறுமை கசக்கும்; ஆனால் அதன்மூலம் கிடைக்கும் பலன் இனிக்கும்.
- ரூஸோ
பொதுஅறிவு
ஒரு பைசாத்தமிழன் என்னும் வாரஇதழை நடத்தியவர் யார்?
அயோத்திதாசர்
இன்றைய முக்கியச் செய்திகள்
* அறத்துப்பால், பொருட்பாலில் உள்ள 1050 குறள்களையும் பள்ளிப் பாடங்களில் சேர்க்க வேண்டும். தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.
* அரபிக்கடலில் இன்று காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகிறது. தமிழகத்திற்கு எந்த தாக்கமும் இருக்காது.
* நிலவை ஆய்வு செய்ய அனுப்பப்பட்ட ஓரியன் விண்கலம் பூமிக்கு திரும்புகிறது.
* வங்கதேசத்துக்கான எதிரான முதல் டெஸ்ட் போட்டி. கே.எல்.ராகுல் கேப்டனாக அறிவிப்பு.
Today's Headlines
* 1050 Thirukural’s should be included in the school
syllabus. High Court Madurai Branch Order to Tamil Nadu Govt.
கருத்துகள்
கருத்துரையிடுக