பள்ளி - காலை வணக்கக் கூட்ட செயல்பாடுகள் - 15.12.2022, வியாழன்
15.12.2022, வியாழன்
திருக்குறள்
கணைகொடிது யாழ்கோடு செவ்விதுஆங்கு அன்ன
வினைபடு பாலால் கொளல்
பொருள்
நேராக இருந்தாலும் அம்பு கொடியதாக இருக்கிறது.
வளைவாக இருந்தாலும் யாழ் இனிமையான இசையைத் தருகிறது.
அதுபோல, மக்களின் பண்புகளை தோற்றத்தால் பார்க்காமல் செயல்வகையால் உணர வேண்டும்.
பழமொழி
Little strokes fell great oaks.
அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும்.
வாழ்வில் வெற்றி பெறுவது மட்டும் நமது வேலையல்ல. தொடர்ந்து வரும் தோல்விகளையும் உற்சாகம் குறையாமல் ஏற்றுக்கொள்வதும் நமது வேலைதான். - லூயிஸ் ஸ்டீவன்சன்.
பொதுஅறிவு
இமயம் சென்று கல்லெடுத்து கண்ணகிக்கு கோவில் கட்டியவன் யார்?
சேரன் செங்குட்டுவன்.
இன்றைய முக்கியச் செய்திகள்
* ஜீ 20 மாநாட்டுக் கூட்டங்கள். பிரான்ஸ், ஆஸ்திரேலியா தலைவர்கள் தமிழகத்திற்கு வருகை தர ஏற்பாடு.
* தமிழகத்தில் அரையாண்டுத்தேர்வுகள் இன்று முதல் தொடக்கம்.
* தமிழகத்தில் எலி மருந்துக்கு தடை. அரசாணை வெளியீடு.
* வங்கக் கடலில் இன்று உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வுநிலை. வானிலை மையம் தகவல்.
* உலகக் கோப்பை கால்பந்து போட்டி. குரோஷியைாவை துவம்சம் செய்து இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது அர்ஜென்டினா.
Today's Headlines
* G20 summit meetings. France, Australia leaders to visit
Tamil Nadu.
கருத்துகள்
கருத்துரையிடுக