பள்ளி - காலை வணக்கக் கூட்ட செயல்பாடுகள் - 16.12.2022, வெள்ளி
16.12.2022, வெள்ளி
திருக்குறள்
உளர்என்னும் மாத்திரையர் அல்லால் பயவாக்
களர்அனையர் கல்லா தவர்
பொருள்
கல்லாதவர் பயனில்லாத களர்நிலம் போன்றவர். அவர் உயிரோடு இருக்கிறார் என்பதைத் தவிர அவரால் வேறு எந்தப் பயனும் இல்லை.
பழமொழி
Tit for tat
யானைக்கும் பானைக்கும் சரி
பொன்மொழி
எல்லோரையும் திருப்திபட வைப்பவனால் வாழ்க்கையில் வெற்றி பெற முடியாது. - லெனின்.
பொதுஅறிவு
இந்திய மறுமலர்ச்சியின் தந்தை யார்?
இராஜாராம் மோகன்ராய்
இன்றைய முக்கியச் செய்திகள்
* தமிழகத்தில் கிராம, வட்டார, மாவட்ட
ஊராட்சிகளுக்கு முறையே ரூ.5 லட்சம், ரூ.25 லட்சம், ரூ.50 லட்சம் ஆக நிதி
அதிகாரம் உயர்வு.
* அரசுக் கல்லூரி பேராசிரியர்கள் 192 பேருக்கு
விருப்பப்படி பணியிட மாறுதல்: உயர் கல்வித்துறை தகவல்.
* இந்திய பெருங்கடல் பகுதியில் இருந்து சீன உளவு கப்பல் திரும்பி சென்றது -
இந்திய கப்பற்படை தீவிர கண்காணிப்பு.
* நாட்டில் 20 புதிய அணுமின் நிலையங்களை 2031-ம் ஆண்டுக்குள் தொடங்க மத்திய அரசு திட்டம்.
* உலகக் கோப்பை கால்பந்து இறுதிப்போட்டி : அர்ஜென்டினாவுக்கு எதிராக
களமிறங்கும் பிரான்ஸ்.
Today’s
Headlines
* In
Tamil Nadu, the financial authority has been increased to Rs.5 lakh, Rs.25 lakh
and Rs.50 lakh for village, district and district panchayats respectively.
* 192
government college professors got voluntary transfer- information by Higher
Education Department..
*
Chinese spy ship returns from Indian Ocean - Indian Navy Keeps watching
vigilantly.
* Central government plans to start 20 new
nuclear power plants in the country by 2031.
* World
Cup Football Final: France vs Argentina.
கருத்துகள்
கருத்துரையிடுக