பள்ளி - காலை வணக்கக் கூட்ட செயல்பாடுகள் - 17.12.2022, சனி
17.12.2022, சனி
திருக்குறள்
விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல்
கற்றாரோடு ஏனை யவர்
பொருள்
கற்றவர்க்கும் கல்லாதவர்க்கும் இடையே உள்ள வேறுபாடானது, மக்களுக்கும் விலங்குகளுக்கும் இடையே உள்ள வேறுபாட்டிற்கு இணையானது.
பழமொழி
Distance lends enchantment to the view
இக்கரைக்கு அக்கரை பச்சை
பொன்மொழி
மனித குலத்திற்கோ எது ஒன்றுபடுத்துகிறதோ, அதுவே நல்லது. மேலானது. அழகானது. அதைப் பிரித்து சிதைப்பது கேடானது. தவறானது. இழிவானது. - லியோ டால்ஸ்டாய்
பொதுஅறிவு
இந்தியாவின் மிகப்பெரிய நதி எது?
கங்கை
இன்றைய முக்கியச் செய்திகள்
* மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு மே - 7 ஆம் தேதி நடைபெறும். தேசிய தேர்வு முகமை அறிவிப்பு.
* 2023 ஆம் ஆண்டிற்கான டி.என்.பி.எஸ்.சி தேர்வு அட்டவணை வெளியீடு.
* திருவண்ணாமலையில் மகாதீபம் நேற்றுடன் நிறைவு.
* தொழிலாளர் நலன், திறன் மேம்பாட்டுத்துறை சார்பில் ரூபாய் 1880 கோடி செலவில் புதிய கட்டடங்கள். முதல்வர் திறந்து வைத்தார்.
Today's Headlines
*
NEET entrance exam for medical courses will be held on May - 7th. National
Examination Agency Notification.
கருத்துகள்
கருத்துரையிடுக