பள்ளி - காலை வணக்கக் கூட்ட செயல்பாடுகள் - 21.12.2022, புதன்

21.12.2022, புதன்

திருக்குறள்

தொடங்கற்க   எவ்வினையும்   எள்ளற்க   முற்றும்
இடங்கண்ட பின்அல் லது.

பொருள்

பொருத்தமான இடத்தை அறியாமல் எந்தச் செயலையும் தொடங்கவும் கூடாது. இகழவும் கூடாது.

பழமொழி

None will check better than a beat

அடி உதவுவது போல அண்ணன் தம்பி உதவ மாட்டான்.

பொன்மொழி

ஆசிரியர்களுக்கு கொடுக்கும் ஊதியம் விதைநெல் போன்றது. அதற்கு கணக்கு பார்த்தால் விளைச்சல் இருக்காது. - காமராசர்.

பொதுஅறிவு

பொதுமக்களுக்குத் தேவையான தகவல்களை வழங்கும் நாட்டுப்புறக்கலை எது?

வில்லுப்பாட்டு

இன்றைய முக்கியச் செய்திகள்

* தமிழ்நாடு அரசுப் பணி பதவி உயர்வில் மாற்றுத் திறனாளிகளுக்கு 4% இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக உயர்மட்ட குழு அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியீட்டுள்ளது.

* “ஸ்மார்ட் மீட்டர் பொருத்தக்கூடிய பணிகள் முடிவடைந்த பின்னர் மாதந்தோறும் மின் அளவு கணக்கீடு செய்யப்படும்” என்று தமிழக மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.

* தமிழ் மொழியின் வளர்ச்சிக்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

* 'சர்வதேச கால்பந்து போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவேன்' - அர்ஜென்டினா கேப்டன் மெஸ்சி அறிவிப்பு

Today’s Headlines

* The Government of Tamil Nadu has set up a high-level committee to provide 4% reservation for differently-abled persons in the promotion of Tamil Nadu government jobs.

 * Tamil Nadu Power Minister Senthil Balaji said that after the completion of the installation of smart meters, the amount of electricity will be calculated every month.

 * The Madurai branch of the Madras High Court has directed the Tamil Nadu government to take necessary steps for the development of the Tamil language.

*  'I will continue to play in international football matches' - Argentina captain Messi announced.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பத்தாம் வகுப்பு - தமிழ்

பத்தாம் வகுப்பு - தமிழ்