இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்.
02.01.2023, திங்கள்
திருக்குறள்
கற்றறிந்தார் கல்வி விளங்கும் கசடறச்
சொல்தெரிதல் வல்லார் அகத்து.
பொருள்
சொற்களை ஆராயும் அறிஞர் நிறைந்த அவையில் பேசும்போதுதான் பலநூல்களைக் கற்றவரின் கல்வி பெருமையடையும்.
பழமொழிMake hay while the sun shines.
காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்
பொன்மொழி
நன்மை நேர்ந்தாலும் சரி அல்லது கெடுதல் நேர்ந்தாலும் சரி, உனது செயலின் பயனை நீ அடைய வேண்டிய நிலை ஏற்படும். - கவுதம புத்தர்.
பொதுஅறிவு
பாலைவனக் கப்பல் என்றழைக்கப்படுவது எது?
ஒட்டகம்.
இன்றைய முக்கியச் செய்திகள்
* தமிழகத்தில் 34
ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. அதில் 8 பேருக்கு இணைச் செயலாளராக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
* இந்தியா, பாக்.,
இரு நாடுகளும் தங்கள் நாடுகளில் உள்ள அணு சக்தி நிலையங்கள்
பொதுமக்கள் மற்றும் கைதிகள் குறித்த பட்டியலை நேற்று பரிமாறிக்கொண்டன.
* இந்தியாவின் முதல் எல்.என்.ஜி.,எரிவாயு லாரியான 'பி.இ., 5528
டிராக்டர்' என்ற லாரியை, 'ப்ளூ
எனர்ஜி மோட்டார்ஸ்' நிறுவனம் செயல்பாட்டிற்கு
கொண்டுவந்துள்ளது.
* புதுடில்லி மற்றும் அதன் அருகில் உள்ள
பகுதிகளில் சுற்றுச் சூழல் மாசை குறைக்கும் வகையில், தொழிற்சாலைகள்
மற்றும் வணிக நிறுவனங்களில் நிலக்கரி எரிபொருள்களை பயன்படுத்துவதற்கான தடை நேற்று
முதல் அமலுக்கு வந்ததுள்ளது.
* டாடா ஓபன் மகாராஷ்டிரா டென்னிஸ்
ஒற்றையர் பிரிவு பிரதான சுற்றில் விளையாட இந்தியாவின் ராம்குமார் தகுதி .
Today's Headlines
* 34 IAS officers have been promoted in Tamil Nadu. 8 of
them have been promoted as Joint Secretary.
* India and Pakistan yesterday exchanged lists of civilians
and prisoners at nuclear power plants in their countries.
* Blue Energy Motors has launched India's first LNG and LPG
powered truck 'PE, 5528 Tractor'.
* In order to reduce pollution in New Delhi and nearby
areas, a ban on the use of coal fuel in industries and commercial
establishments has come into effect from yesterday.
* India's Ram Kumar qualifies to play in Tata Open
Maharashtra Tennis Singles Main Round.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * *
கருத்துகள்
கருத்துரையிடுக