பள்ளி - காலை வணக்கக் கூட்ட செயல்பாடுகள் - 03.01.2023, செவ்வாய்
03.01.2023, செவ்வாய்
திருக்குறள்
அவைஅறிந்து ஆராய்ந்து சொல்லுக சொல்லின்
தொகைஅறிந்த தூய்மை யவர்.
பொருள்
சொல்வளமும் நற்பண்பும் உடையவர்கள் தாம் பேசும் அவையின் தகுதி அறிந்து பேசுதல் வேண்டும்.
பழமொழி
A hungry man is an angry man
பசி வந்தால் பத்தும் பறந்து போகும்.
பொன்மொழி
கடைசி வரை நம்பிக்கை இழக்காதே, ஏனெனில் கடைசி வரியில் கூட உனக்கான வெற்றி எழுதப்பட்டிருக்கலாம்.
பொதுஅறிவு
நாட்டில் உள்ள உயர்நீதி மன்றங்களின் எண்ணிக்கை எவ்வளவு?
25
இன்றைய முக்கியச் செய்திகள்
* 2016 இல் கொண்டு வரப்பட்ட பண மதிப்பிழப்பு நடவடிக்கை செல்லும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு.
* தமிழ்நாட்டில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கான மனநல ஆலோசனை வகுப்புகள் முதற்கட்டமாக 10 மாவட்டங்களில் அமல்.
* கொரோனாவைக் கட்டுப்படுத்த மீண்டும் கபசுரக் குடிநீர். தமிழக அரசிடம் மத்திய அரசு வாங்குகிறது.
* முதுமலையில் 175 வகையான வண்ணத்துப் பூச்சிகள் உள்ளன. கணக்கெடுப்பில் தகவல்.
* இந்தியா இலங்கை அணிகள் மோதும் டி20 கிரிக்கெட் போட்டி இன்று தொடக்கம்.
Today's Headlines
* The Supreme Court verdict that demonetization measures
brought in 2016 will go ahead.
கருத்துகள்
கருத்துரையிடுக