04.01.2023, புதன்
திருக்குறள்
மோப்பக் குழையும் அனிச்சம் முகம்திரிந்து
நோக்கக் குழையும் விருந்து
பொருள்
அனிச்சம் பூவானது முகந்து பார்த்தால் வாடிவிடும்.
விருந்தினரோ முகம் மாறுபட்டுப் பார்த்தாலே வாடிவிடுவர்.
பழமொழிDiamonds cut diamonds.
முள்ளை முள்ளால் எடு.
பொன்மொழி
பணம், ஆற்றல், திறமை இவையெல்லாம் வாழ்க்கைக்குரிய பொருட்களே தவிர, அவையே வாழ்க்கை ஆகாது. - ஜேம்ஸ் ஆலன்.
பொதுஅறிவு
இரத்தம் உறைவதற்குத் தேவைப்படும் வைட்டமின் எது?
வைட்டமின் K
இன்றைய முக்கியச் செய்திகள்
* தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும்
அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள 1,895 கவுரவ
விரிவுரையாளர்கள் பணியிடங்களை நிரப்ப இன்று முதல் சான்றிதழ் சரிபார்ப்புப் பணி
நடைபெறும் என்று உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
* பொங்கல் பரிசு தொகுப்பு டோக்கன்
வழங்கும் பணி தொடக்கம்: ஜனவரி 9 முதல் பொருட்கள் விநியோகம்.
* கரோனா ஆபத்து அதிகமுள்ள சீனா, தென் கொரியா, ஜப்பான், தாய்லாந்து,
ஹாங்காங், சிங்கப்பூர் ஆகிய 6 நாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகளுக்கு ஆர்டி-பிசிஆர்
பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.
* சிபிஐ உட்பட விசாரணை ஏஜென்சிகளின்
தகவல்களை எளிதில் அணுகுவதற்கான புதிய மென்பொருளை அமலாக்கத் துறை உருவாக்கி
வருகிறது. அந்த மென்பொருளுக்கு "சீடோஸ்" என பெயரிடப்பட்டுள்ளது.
* இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான
இந்திய கிரிக்கெட் அணியில் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா
சேர்க்கப்பட்டுள்ளதாகஇந்திய கிரிக்கெட் வாரியத்தின் சீனியர் தேர்வு கமிட்டிக் குழு
அறிவித்துள்ளது.
Today's Headlines
* Higher Education Minister Ponmudi has said that the
certificate verification process will be held from today to fill the vacant
1,895 honorary lecturer posts in government arts and science colleges in Tamil
Nadu.
* Pongal Gift Package
Token Issue started: Distribution of goods from 9th January.
* RT-PCR test is
mandatory for passengers coming to India from 6 countries where the risk of
corona is high - China, South Korea, Japan, Thailand, Hong Kong and Singapore.
* Rithvik Sanjeevi of
Tamil Nadu won the gold medal in men's category at the Akhilesh Das Gupta
Memorial All India Senior Ranking Badminton Tournament.
* The Senior Selection
Committee of the Indian Cricket Board has announced that fast bowler Bumrah has
been included in the Indian cricket team for the ODI series against Sri Lanka.
கருத்துகள்
கருத்துரையிடுக