பள்ளி - காலை வணக்கக் கூட்ட செயல்பாடுகள் - 05.01.2023, வியாழன்.
05.01.2023, வியாழன்
திருக்குறள்
சலத்தால் பொருள்செய்து ஏமார்த்தல் பசுமண்
கலத்துள்நீர் பெய்துஇரீ யற்று
பொருள்
தீய செயலால் பொருளைச் சேர்த்துப் பாதுகாத்து வைப்பது பச்சை மண்பாண்டத்தில் தண்ணீரை ஊற்றிப் பாதுகாத்து வைப்பது போன்றதாகும்.
பழமொழி
Great engines turn on small pivots
அச்சாணி இல்லாத தேர் முச்சாணும் ஓடாது.
பொன்மொழி
நீங்கள் உங்கள் வாழ்க்கையைத் திட்டமிடவில்லை என்றால் வாய்ப்புகள் உங்களை வேறு ஒருவரின் திட்டத்தில் விழ வைக்கும். - ஜிம் ரோஹன்.
பொதுஅறிவு
“இந்தியாவின் ஏவுகணை பெண்” என்று அழைக்கப்படுபவர் யார்?
டெசி தாமஸ்
இன்றைய முக்கியச் செய்திகள்
* இருப்பிடச் சான்றிதழ் இல்லாமல் ஆதாரில் முகவரியை மாற்றம் செய்யும் புதிய வசதி அறிமுகம்.
* பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுடன் மோடி கலந்துரையாடும் நிகழ்ச்சி டெல்லியில் 27 ஆம் தேதி நடக்கிறது.
* தீவுத்திடலில் சென்னை சங்கமம் சார்பில் நடைபெறவுள்ள நம்ம ஊரு திருவிழாவை 13 ஆம் தேதி முதல்வர் தொடங்கி வைக்கிறார்.
* அக்னிபாதை திட்டத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டவீரர்களுக்கு 6 மாத கால பயிற்சி தொடக்கம்.
* இந்தியா - இலங்கை அணிகளுக்கிடையேயான இரண்டாவது டி20 போட்டி இன்று நடக்கிறது.
Today's Headlines
* Introduction of new facility of change of address in
Aadhaar without residence certificate.
கருத்துகள்
கருத்துரையிடுக