பள்ளி - காலை வணக்கக் கூட்ட செயல்பாடுகள் - 06.01.2023, வெள்ளி

06.01.2023, வெள்ளி

திருக்குறள்

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பொருள்

எந்தப் பொருளை யார் யார் சொல்லக் கேட்டாலும் அப்பொருளின் உண்மைப் பொருளை அறிவதே அறிவாகும்.

பழமொழி

Justice stays long, but strikes at leis.

அரசன் அன்றே கொல்வான், தெய்வம் நின்று கொல்லும்.

பொன்மொழி

பழிவாங்குதல் ஆரம்பத்தில் இனிக்கும். ஆனால், சிறிது காலம் சென்றபின் கசப்பாக மாறிவிடும். அது எய்தவனையே திரும்பி வந்து கொல்லும்.

பொதுஅறிவு

மதுரை காந்தி என்று அழைக்கப்படுபவர் யார்?

என்.எம்.ஆர் சுப்பாராமன்

இன்றைய முக்கியச் செய்திகள்

* வாக்காளர்கள் இறுதிப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் 6.20 கோடி வாக்காளர்கள் உள்ளனர். ஆண்களை விட பெண்களே அதிகம்.

* பபாசியின் 46 - வது புத்தகக் கண்காட்சியை சென்னை நந்தனம் ஒய்.டிம்.சி.ஏ மைதானத்தில் முதல்வர் இன்று தொடங்கி வைக்கிறார். 

* பிளஸ் 2 மாணவர்கள் நுழைவுத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க பயிற்சி. அரசுப் பள்ளிகளில் ஆரம்பமானது.

* அரிசி உற்பத்திக்கு மாற்றாக சிறுதானிய உற்பத்தியை மேம்படுத்த வேண்டும். மத்திய அரசு தகவல்.

* 15 - வது உலகக்கோப்பை ஹாக்கி போட்டிகள் ஒடிசா மாநிலத்தில் வருகிற 13 - ஆம் தேதி முதல் 29 - ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

Today's Headlines

* The final list of voters has been published. Tamil Nadu has 6.20 crore voters. More women than men.

* Chief Minister will inaugurate Babaasi's 46th  Book Fair at Nanthanam YMCA ground in chennai today.

Plus 2 students practice to apply for entrance exams. It started in government schools.

Small grains production should be promoted as an alternative to rice production. Central Govt Information.

* The 15th edition of the word cup will be  held from 13th to 29th in odisa.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பத்தாம் வகுப்பு - தமிழ்

பத்தாம் வகுப்பு - தமிழ்