பள்ளி - காலை வணக்கக் கூட்ட செயல்பாடுகள் - 09.01.2023, திங்கள்
09.01.2023, திங்கள்
திருக்குறள்
அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை
பொருள்
தன்னைத் தோண்டுபவரைத் தாங்கும் நிலம்போலத் தன்னை இகழ்பவரைப் பொறுப்பது தலை சிறந்தது.
பழமொழி
A light heart lives long.
பொன்மொழி
உலகில் செயல்களைச் செய்து காட்டுபவர்
சிலர். செய்துகாட்டும் செயல்களைப் பார்த்துக் கொண்டிருப்பவர் பலர். என்ன செயல்
நடைபெறுகிறது என்று அறியாமலேயே இருப்பவர் அநேகர்.
பொதுஅறிவு
பாராஒலிம்பிக் எந்த விளையாட்டு வீரர்களை ஈடுபடுத்துகிறது?
உடல் மற்றும் அறிவுசார் குறைபாடுகள் உள்ள விளையாட்டு வீரர்கள்.
இன்றைய முக்கியச் செய்திகள்
* பல ஆண்டுகளுக்குப் பிறகு மாநில நூலகக்
குழு மற்றும் சென்னை மாநகர நூலக ஆணைக்குழு அமைத்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக
அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.
* தர்மபுரியில் மாநில செஸ் போட்டி-1,000
மாணவ, மாணவிகள் பங்கேற்பு.
* ஐ.எஸ்.எல் கால்பந்து: ஈஸ்ட் பெங்காலை
வீழ்த்தி ஒடிசா அணி வெற்றி.
Today's Headlines
* Minister Anbil Mahes said that after many years, the State
Library Committee and the Chennai Municipal Library Commission have formed and
issued an ordinance.
* State Chess Tournament at Dharmapuri - 1,000 students
participated.
* ISL Football: Odisha beat East Bengal.
கருத்துகள்
கருத்துரையிடுக