பள்ளி - காலை வணக்கக் கூட்ட செயல்பாடுகள் - 10.01.2023, செவ்வாய்
10.01.2023, செவ்வாய்
திருக்குறள்
ஆக்கமும் கேடும் அதனால் வருதலால்
காத்துஓம்பல் சொல்லின்கண் சோர்வு
பொருள்
ஆக்கமும் கேடும் சொல்கின்ற சொல்லால் வருதலால் ஒருவன் தன்னுடைய சொல்லில் தவறு நேராமல் காத்துக்கொள்ள வேண்டும்.
பழமொழி
Venture a small fish to catch a big one
ஆடை பாதி, ஆள் பாதி.
பொன்மொழி
விமர்சனப்பூர்வமானப் பார்வையின் விளைவாக மனிதன் எல்லாவற்றையும் நேற்று, இன்று, நாளை என்கிற முப்பரிமாணக் காலத்தில் வைத்துப் பார்க்கிறான். - பாவ்லோ பிரையர்.
பொதுஅறிவு
தமிழின் ஒடிசி என அழைக்கப்படும் நூல் எது?
மணிமேகலை
இன்றைய முக்கியச் செய்திகள்
* ரூபாய் 1000 ரொக்கப் பணத்துடன் பொங்கல் பரிசுத்தொகுப்பு விநியோகம் தொடங்கியது. சென்னையில் முதலமைச்சர் வழங்கினார்.
* பள்ளி குழந்தைகளுக்கான காலை உணவுத் திட்டம் நாட்டிற்கே முன்னோடியான திட்டம் என ஆளுநர் புகழாரம்.
* மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு புதுமைப் பெண் முன்னோடி திட்டத்தில் 2 லட்சம் மாணவிகள் பயனடைவர்.
* இந்திய வெளிநாடு வாழ் இளைஞர்களுக்கு திறமை, நுண்திறன், அசாத்திய திறமைகள் உள்ளன. மோடி பெருமிதம்.
* ஒடிசாவில் உலக கோப்பை ஆடவர் ஹாக்கி
போட்டி: பிரமாண்ட தொடக்க நிகழ்ச்சியுடன் தொடங்கியது.
Today's Headlines
* Pongal gift pack distribution started with Rs 1000 cash.
Presented by the Chief Minister in Chennai.
* 2 lakh female students will be benefited in Muvalur
Ramamirtham Ammaiyar Memorial Innovation Women Pioneer Project.
* Men's Hockey world cup begins in odisha with the grand.
கருத்துகள்
கருத்துரையிடுக