பள்ளி - காலை வணக்கக் கூட்ட செயல்பாடுகள் - 11.01.2023, புதன்
11.01.2023, புதன்
திருக்குறள்
பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற
செய்யாமை செய்யாமை நன்று
பொருள்
பொய் சொல்லாமை என்னும் அறத்தை இடைவிடாமல் பின்பற்றி நடந்தால் பிற அறங்களைச் செய்யாவிடினும் நன்மை உண்டாகும்.
பழமொழி
A young twig is easier twisted than an old tree.
ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா?
பொன்மொழி
ஒரே ஒரு நற்செயல் மட்டும் தவறாது செய்தால், சொர்க்கம் உங்களைத் தேடி வரும். அந்த செயல்தான் உண்மை பேசுதல்.
பொதுஅறிவு
ஓசோன் படலம் யாரால் கண்டுபிடிக்கப்பட்டது?
சார்லஸ் ஃபேபரி மற்றும் ஹென்றி புய்ஸ்ஸான்
இன்றைய முக்கியச் செய்திகள்
* சுயதொழில் தொடங்கி முன்னேற முத்ரா வங்கி கடன் உதவி பெற்றதில் தமிழ்நாடு முதலிடம்.
* 13 வது தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கான வினாடி-வினா போட்டிகள் நடைபெற உள்ளதாக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹீ தகவல்.
* தமிழகத்தில் விரைவில் புதிய சித்த மருத்துவக் கல்லூரி தொடங்கப்படும் என மத்திய ஆயஷ் துறை இணை அமைச்சர் தகவல்.
* நாளையுடன் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை முடிய வாய்ப்பு.
* இந்தியா - இலங்கை அணிகளுக்கிடையேயான முதல் ஒருநாள் மட்டைப்பந்து போட்டியில் இந்தியா வெற்றி.
Today's Headlines
* Tamil Nadu is the first in receiving loan assistance from
Mudra Bank to start self-employment.
* Northeast monsoon likely to end in tamilnadu by tomorrow.
கருத்துகள்
கருத்துரையிடுக