பள்ளி - காலை வணக்கக் கூட்ட செயல்பாடுகள் - 13.01.2023, வெள்ளி
13.01.2023, வெள்ளி
திருக்குறள்
வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும்
பொருள்
குற்றம் நேர்வதற்கு முன்னமே வராமல் காத்துக்கொள்ளாதவனுடைய வாழ்க்கை, நெருப்பின் முன் நின்ற வைக்கோல் போர் போல் அழிந்துவிடும்.
பழமொழி
Good swimmers are sometimes drowned
யானைக்கும் அடி சறுக்கும்.
பொன்மொழி
வெற்றி என்பது எட்டிவிடும் தூரத்தில் இல்லை.
நானும் அதை விட்டுவிடும் எண்ணத்தில் இல்லை.
பொதுஅறிவு
தேவபூமி என்றழைக்கப்படும் மாநிலம் எது?
உத்தரகண்ட்
இன்றைய முக்கியச் செய்திகள்
* தமிழ்நாடு, புதுவை,
காரைக்கால் பகுதிகளில் வடகிழக்கு பருவமழை விலகியதாக சென்னை வானிலை
ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Today’s Headlines
* The Chennai Meteorological Center has reported that the
Northeast Monsoon has receded over Tamil Nadu, Puduwai and Karaikal.
கருத்துகள்
கருத்துரையிடுக