பள்ளி - காலை வணக்கக் கூட்ட செயல்பாடுகள் - 18.01.2023, புதன்
18.01.2023, புதன்
திருக்குறள்
அருட்செல்வம் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம்
பூரியார் கண்ணும் உள
பொருள்
அருளாகிய செல்வமே செல்வங்களுள் சிறந்த செல்வமாகும். பொருட்செல்வம் இழிந்தவரிடத்திலும் உள்ளது.
பழமொழி
Every tide has its ebb
ஏற்றம் உண்டானால் இறக்கம் உண்டு.
பொன்மொழி
நடப்பதெல்லாம் நன்மைக்கே என நினைத்து வாழப் பழகிவிட்டால் மகிழ்ச்சியை நாம் தேடிச் செல்ல வேண்டாம். மகிழ்ச்சியே நம்மைத் தேடி வரும்.
பொதுஅறிவு
இந்திய உச்சநீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதியாக நியமிக்கப்பட்டவர் யார்?
எம்.பாத்திமா பீவி
இன்றைய முக்கியச் செய்திகள்
* தமிழ் வளர்ச்சித் துறை சார்பில்
சென்னையில் நேற்று நடைபெற்ற திருவள்ளுவர் தின விழாவில் தமிழ் மற்றும் தமிழர்
நலனுக்காக தொண்டாற்றிய 10 அறிஞர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின்
விருதுகள் வழங்கி கவுரவித்தார்.
Today’s Headlines
* At the Tiruvalluvar Day function held in Chennai yesterday
on behalf of the Tamil Development Department, Chief Minister M.K.Stalin
honored 10 scholars who have volunteered for the welfare of Tamil and
Tamilians.
கருத்துகள்
கருத்துரையிடுக