பள்ளி - காலை வணக்கக் கூட்ட செயல்பாடுகள் - 19.01.2023, வியாழன்
19.01.2023, வியாழன்
திருக்குறள்
செய்தக்க அல்ல செயக்கூடும் செய்தக்க
செய்யாமை யானும் கெடும்.
பொருள்
ஒருவன் செய்யத் தகாத செயலைச் செய்தாலும் கெடுவான். செய்யக்கூடிய செயலைச் செய்யாவிட்டாலும் கெடுவான்.
பழமொழி
Failures are stepping stones to success.
தோல்வியே வெற்றிக்கு முதல்படி.
பொன்மொழி
போதுமான அளவுக்குச் சுதந்திரமாகச் செயல்படும் உரிமையும் அதிகாரமும் உடைய ஒரு தலைவரால்தான், தமது அணியை வழிநடத்திச் செல்லும் பொறுப்பை வெற்றிகரமாக நிறைவேற்ற முடியும்.
பொதுஅறிவு
இந்தியாவில் முதல் துணைப் பிரதமர் பதவியை வகித்தவர் யார்?
வல்லபாய் படேல்
இன்றைய முக்கியச் செய்திகள்
* அதிக அளவில் கழிவுகள் கலப்பதால் சென்னையில் ஓடும் ஆறுகள் உயிரினங்கள் வாழத்தகுதி அற்றதாக மாறிவிட்டன.
* இம்மாதம் 31 - ஆம் தேதி நாடாளுமன்றக் கூட்டம் புதிய கட்டிடத்தில் தொடங்குவதாக ஜனாதிபதி திரௌபதி முர்மு அறிவித்துள்ளார்.
* ஆசிரியர் நியமனத்தில் இனி வெயிட்டேஜ் முறை கிடையாது. ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு.
* 60 ஆண்டுகளில் முதன்முறையாக சீனாவின் மக்கள்தொகை குறைந்துள்ளது.
* இந்தியா - நியூலாந்து அணிகளுக்கிடையேயான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி. சுப்மன் கில் அதிரடியாக விளையாடி இரட்டை சதம் அடித்தார்.
Today's Headlines
* The rivers flowing in Chennai have become inhospitable due
to heavy pollution.
* India won the first ODI between India and New Zealand. Sub-man Gill played in action and scored a double century.
கருத்துகள்
கருத்துரையிடுக