பள்ளி - காலை வணக்கக் கூட்ட செயல்பாடுகள் - 20.01.2023, வெள்ளி

 20.01.2023, வெள்ளி

திருக்குறள்

மடியை  மடியா  ஒழுகல்  குடியைக்

குடியாக  வேண்டு  பவர்

பொருள்

தான் பிறந்த குடியை மேலும் நல்ல குடியாக ஆக்க வேண்டுமென்று விரும்புபவர் சோம்பலைக் கொடியது எனக்கருதி விட்டு விட வேண்டும்.

பழமொழி

Bare words buy no barley

வெறுங்கை முழம் போடுமா?

பொன்மொழி

ஒரு செயலின் நல்ல தொடக்கமே பாதி வேலை முடிந்ததற்குச் சமம் - ஹேராஸ்.

பொதுஅறிவு

இந்தியாவில் முதல் அச்சுப் புத்தகம் எந்த மொழியில் வெளியானது?

தமிழ்

இன்றைய முக்கியச் செய்திகள்

* மின் இணைப்பு எண்ணுடன் 2 கோடி ஆதார் எண்கள் இணைப்பு: அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல்.

 * நீட் விலக்கு மசோதா குறித்து விளக்கம் கேட்டு மீண்டும் மத்திய அரசு கடிதம்: மா.சுப்பிரமணியன் தகவல்.

* அரசுப் பள்ளிகளுக்கான என்எஸ்எஸ் நிதி, வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது.

* உலகம் முழுவதும் தொற்றை சமாளிக்க சுகாதார கட்டமைப்பு உருவாக்கப்பட வேண்டும்: ஜி-20 கூட்டத்தில் இந்தியா வலியுறுத்தல்.

* ஐசிசி ஒருநாள் போட்டி தரவரிசை : விராட் கோலி, சிராஜ் முன்னேற்றம்.

* ஹாக்கி உலகக்கோப்பை: 14-0 என்ற கணக்கில் சிலி அணியை வீழ்த்தி காலிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றது நெதர்லாந்து.

Today’s Headlines

* Minister SenthilBalaji informed  that 2 crore Aadhaar numbers had been linked with electricity connection number.

 * Central Government sent letter again asking for clarification on NEET Exemption Bill Information by Minister M. Subramanian

* The School Education said NSS funds for government schools will be paid directly into bank accounts said by the school education department .

* Health infrastructure must be built to tackle the pandemic worldwide: India insists at G-20 meeting.

* ICC ODI Rankings: Virat Kohli and Siraj Progressed.

 * Hockey World Cup: Netherland beat Chile by14-0 and reached quarter-final round.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பத்தாம் வகுப்பு - தமிழ்

பத்தாம் வகுப்பு - தமிழ்