பள்ளி - காலை வணக்கக் கூட்ட செயல்பாடுகள் - 23.01.2023, திங்கள்
23.01.2023, திங்கள்
திருக்குறள்
துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை
பொருள்
மழையானது உண்பவர்களுக்கு உணவுப்பொருள்களை உண்டாக்கி அவர்களுக்கு குடிநீராகவும் பயன்படுவது மழையே ஆகும்.
பழமொழி
All are not saints that go to church
வெளுத்தது எல்லாம் பால் ஆகுமா? கறுத்தது எல்லாம் தண்ணீர் ஆகுமா?
பொன்மொழி
தன்னுடைய தைரியம், சுயமரியாதை, தன்னம்பிக்கையை இழக்காமல் இருப்பவனுக்குத் தோல்வி என்ற ஒன்று இருக்க முடியாது. - ஒரிசன் ஸ்வெட் மார்டென்.
பொது அறிவு
உலகிலேயே மிகப்பெரிய பூ எது?
அமோர்போபாலஸ். இந்தப் பூ மூன்று மீட்டருக்கும் மேலான உயரம் கொண்டது.
இன்றைய முக்கியச் செய்திகள்
* 46 வது சென்னை புத்தகக் கண்காட்சி நேற்றுடன் நிறைவு. 15 லட்சம் வாசகர்கள் வருகை தந்ததாக தென்னிந்திய புத்தகப் பதிப்பாளர் சங்கம் தகவல்.
* தொன்மையான நாடுகள் பட்டியலில் இந்தியா ஏழாம் இடத்தில் உள்ளது.
* மெரினா கடற்கரைச் சாலையில் குடியரசு தி விழா ஒத்திகையில் முப்படை வீரர்கள் அணிவகுத்தனர்.
* உத்திரகாண்டில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 3.8 ஆக பதிவு.
* ஹாக்கி உலகக்கோப்பை: மலேசியாவை வீழ்த்தி ஸ்பெயின் காலிறுதிக்கு முன்னேற்றம்.
Today's Headlines
* The 46th Chennai Book Fair concluded yesterday. According to
the South Indian Book Publishers Association, 15 lakhs readers visited.
கருத்துகள்
கருத்துரையிடுக