பள்ளி - காலை வணக்கக் கூட்ட செயல்பாடுகள் - 24.01.2023, செவ்வாய்
24.01.2023, செவ்வாய்
திருக்குறள்
அவைஅறிந்து ஆராய்ந்து சொல்லுக சொல்லின்
தொகைஅறிந்த தூய்மை யவர்.
பொருள்
சொற்களின் தொகுதியை அறிந்த தூய்மையானவர், அவையின் தரத்தைத் தெரிந்து ஆராய்ந்து சொல்ல வேண்டும்.
பழமொழி
Calm before the storm. stoop to conquer.
புலி பதுங்குவது பாய்வதற்கு அடையாளம்.
பொன்மொழி
உங்களுக்கு மற்றவர் எதை செய்தால், நீங்கள் அதை விரும்ப மாட்டீர்களோ, நீங்களும் அதை மற்றவர்களுக்குச் செய்யாதீர்கள். - கன்பூசியஸ்.
பொதுஅறிவு
ராஜிவ்காந்தி கேல் ரத்னா விருதை வாங்கிய முதல் இந்திய விளையாட்டு வீரர் யார்?
விஸ்வநாதன் ஆனந்த்
இன்றைய முக்கியச் செய்திகள்
* தமிழ்நாட்டில் 74 - வது குடியரசு தினவிழா அணிவகுப்பு 21 அலங்கார ஊர்திகள் தயார்நிலையில் உள்ளன.
* தமிழ்நாட்டில் மேலும் 433 பள்ளிகளுக்கு முதல்வர் காலை உணவுத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.
* கோவில்களுக்குச் சொந்தமான ரூபாய் 3943 கோடி சொத்துகளை மீட்டுள்ளதாக இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் தகவல்.
* ஐ.ஐ.டி.யில் என்ஜீரியங் படிப்பில் சேருவதற்கான ஜே.இ.இ மெயின் நுழைவுத் தேர்வு இன்று தொடங்குகிறது.
* இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கிடையே மூன்றாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி. தொடரை முழுமையாக வெல்ல இந்திய அணி தீவரம்.
Today's Headlines
* 21 floats are ready for the 74th Republic Day parade in
Tamil Nadu.
* Officials said that the Chief minister Breakfast scheme has been extended to 433 more school in Tamil Nadu.
* Hindu Religious Welfare Minister informs that Rs 3943 crore property belonging to temples has been recovered.
* JEE Main entrance exam for admission to engineering course in IIT starts today.
* Third ODI between India and New Zealand. The Indian team is determined to win the series outright.
கருத்துகள்
கருத்துரையிடுக