பள்ளி - காலை வணக்கக் கூட்ட செயல்பாடுகள் - 26.01.2023, வியாழன்
26.01.2023, வியாழன்
தமிழ்ச்சிட்டின் குடியரசு தின வாழ்த்துகள்.
திருக்குறள்
உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும்
சேராது இயல்வது நாடு
பொருள்
மிகுந்த பசி, குறையாத நோய், அழிக்கும் பகை ஆகிய மூன்றும் சேராமல் வாழ்வதே சிறந்த நாடாகும்.
பழமொழி
A Teacher is better than two books.
ஓர் ஆசிரியர் இரு புத்தகங்களை விட மேலானவர்.
பொன்மொழி
தண்டனை கொடுப்பதற்குத் தாமதம் செய். ஆனால், மன்னிப்பு கொடுப்பதற்கு யோசனை கூடச் செய்யாதே. - அன்னை தெரசா.
பொதுஅறிவு
இந்தியாவில் குடியரசுத் தலைவர் எந்தத் தேர்தல் மூலமாகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார்?
மறைமுகத் தேர்தல்.
இன்றைய முக்கியச் செய்திகள்
è இந்தியத் திருநாட்டின் 74 - வது குடியரசு தின விழா. டெல்லியில் 8 அடுக்கு பாதுகாப்பு. டிரோன்கள் பறந்தால் சுட்டுத் தள்ள உத்தரவு.
è மதங்களும் மொழிகளும் நம்மை ஒன்றிணைத்துள்ளன. மகாத்மா காந்தியின் குறிக்கோளின்படி அவரது வழியில் நாம் சுதந்திரத்தை அடைந்துள்ளோம். நாம் ஜனநாயக குடியரசாக வெற்றி பெற்றிருக்கிறோம். நட்சத்திரங்களில் கூட கால்பதிப்போம் என்ற நம்பிக்கை உள்ளது. என குடியரசுத்தலைவர் 74 வது சுதந்திரத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.
è தமிழ்நாடு முழுவதும் குடற்புழு நீக்க சிறப்பு முகாம் பிப்ரவரி 10 ஆம் தேதி நடக்கிறது.
è தனியார் பள்ளிகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி எச்சரிக்கை.
è 10, 11, 12 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு கட்டணம் செலுத்த பள்ளிகளுக்கு கூடுதல் அவகாசம். பிப்ரவரி 4 ஆம் தேதி வரை கட்டலாம்.
è 20 ஓவர் கிரிக்கெட்டில் சிறந்த வீரராக சூர்யகுமார் யாதவை தேர்வு செய்துள்ளது ஐ சி சி.
Today's Headlines
è 74th Republic Day Celebration of India. 8 layers of security in Delhi. Orders
to shoot drones if they fly.
è A special deworming camp will be held across Tamil Nadu on February 10.
கருத்துகள்
கருத்துரையிடுக