பள்ளி - காலை வணக்கக் கூட்ட செயல்பாடுகள் - 27.01.2023, வெள்ளி

27.01.2023, வெள்ளி

திருக்குறள்

தேறற்க  யாரையும்  தேராது  தேர்ந்தபின்

தேறுக  தேறும்  பொருள்

பொருள்

ஆராயமல் யாரையும் நம்பக் கூடாது. நம்பிய பிறகு அவர் சொல்லும் பொருள்களையும் நம்ப வேண்டும்.

பழமொழி

The old fox is caught at last.

பலநாள் திருடன் ஒருநாள் அகப்படுவான்.

பொன்மொழி

வற்றிய பாலை நிலத்தில் பட்ட மரம் தழைக்கலாம். உலகில் அன்பு இல்லாத வாழ்வு தழைக்காது.

பொதுஅறிவு

விண்வெளிக்குச் சென்ற முதல் இந்திய விண்வெளி வீரர் யார்?

இராகேஷ் ஷர்மா

இன்றைய முக்கியச் செய்திகள்

* டெல்லியில் குடியரசு தின விழா கோலாகலம். ஜனாதிபதி திரௌபதி முர்மு தேசியக்கொடியை ஏற்றினார். முப்படைகளின் அணிவகுப்பை ஏற்றார். 

* சென்னையில் குடியரசு தின விழா கோலாகலம். கவர்னர் ஆர்.என்.இரவி தேசியக் கொடியை ஏற்றினார். அலங்கார ஊர்திகள் அணிவகுத்தன.

* அரியலூர் மாவட்டம் வாரணவாசியில் 15 லட்சம் ஆண்டுக்கு முந்தைய கல் கருவி படிமம் கண்டெடுப்பு: மத்திய பல்கலைக்கழக கல்வெட்டியல் துறை பேராசிரியர் தகவல்.

*  மாநிலக் கல்விக் கொள்கைக்கான பரிந்துரைகள் அடங்கிய வரைவு அறிக்கை வரும் ஏப்ரல் மாதத்துக்குள் தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்படும் என்று கொள்கைவடிவமைப்பு குழு தலைவர் நீதிபதி முருகேசன் தெரிவித்துள்ளார்.

* இருதரப்பு உறவை பலப்படுத்த உறுதியான நடவடிக்கை: இந்தியா-எகிப்து 5 ஒப்பந்தம் கையெழுத்து.

* ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: ஜோகோவிச், சபலென்கா அரைஇறுதிக்கு முன்னேற்றம்.

Today's Headlines

* Republic Day Celebrations in Delhi President Draupadi Murmu hoisted the national flag. He mounted the march of the three armies.

* Republic Day Celebrations in Chennai Governor RN Ravi hoisted the national flag. Decorative floats paraded.* Discovery of 15 lakh-year-old stone tools at Varanavasi message by Ariyalur district Professor of Department of Epigraphy, Central University.

* Justice Murugesan, chairman of the policy formulation committee, said that a draft report containing recommendations for the state education policy would be submitted to the Tamil Nadu government by April.

* A concrete step to strengthen bilateral relations: India-Egypt signed in 5 agreements.

* Australian Open tennis: Djokovic, Sabalenka advance to semi-finals


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பத்தாம் வகுப்பு - தமிழ்

பத்தாம் வகுப்பு - தமிழ்