பள்ளி - காலை வணக்கக் கூட்ட செயல்பாடுகள் - 30.01.2023, திங்கள்

30.01.2023, திங்கள்

திருக்குறள்

தகுதி  எனஒன்று நன்றே  பகுதியான்

பாற்பட்டு  ஒழுகப்  பெறின்

பொருள்

யாவரிடத்தும், எவ்வகையிலும் நீதி முறையை விடாமல் பின்பற்றி நடக்க முடியுமாயின் நடுவுநிலைமை என்ற ஒன்றே சிறந்த அறமாகும்.

பழமொழி

Distance lends Enchantment to the view

இக்கரைக்கு அக்கரை பச்சை

பொன்மொழி

உடலை அடக்கி, நாக்கை அடக்கி, மனதையும் அடக்கும் அறிவாளிதான் உண்மையான அடக்கம் உடையவன். - புத்தர்.

பொதுஅறிவு

முதன்முதலில் பத்மஸ்ரீ விருதைப் பெற்றவர் யார்?

அன்னை தெரசா

இன்றைய முக்கியச் செய்திகள்

* ‘கள ஆய்வில் முதல்வர்’ என்னும் திட்டத்திற்காக வேலூரில் பிப்ரவரி 1 ஆம் தேதி முதல்வர் வருகிறார். ரூபாய் 700 கோடி மதிப்பிலான கட்டிடங்களுக்கு அடிக்கல்.

* தமிழகத்தில் பெண்களிடம் இரத்தசோகை அதிகரித்துள்ளதாக தேசிய குடும்பநல ஆணைய ஆய்வில் தகவல்.

* ஜி 20 கல்வி மாநாட்டில் மாணவர் இடைநிற்றல் தடுப்பு குறித்து ஆலோசிக்கப்படும் என சென்னை ஐ.ஐ.டி இயக்குநர் தகவல்.

* மார்ச் 25 - ஆம் தேதி நடைபெறவுள்ள டான்செட் நுழைவுத் தேர்வு பிப்ரவரி 1 - ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்.

* ஒலியைவிட 5 மடங்கு வேகத்தில் செல்லும், உள்நாட்டு ஹைபர்சோனிக் ஏவுகணையை இந்தியா  சோதனை செய்துள்ளது.

* உலக கோப்பை ஹாக்கி: தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தி 9-வது இடம் பிடித்தது இந்தியா.

* ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் : சாம்பியன் பட்டம் வென்றார் ஜோகோவிச்.

Today's Headlines

* The Chief Minister is coming to Vellore on 1st February for the program 'கள ஆய்வில் முதல்வர்'. Foundation stone for buildings worth Rs.700 crores.

According to the National Family Welfare Commission survey, anemia has increased among women in Tamil Nadu.

Director of IIT Chennai informed that student dropout prevention will be discussed at the G20 Education Conference.

* Apply from 1st February for TANCAT Entrance Exam which will be held on 25th March.

* India has test-fired an indigenous hypersonic missile that can travel 5 times the speed of sound.

* Hockey World Cup: India beat South Africa to finish 9th place.

* Australian Open Tennis: Djokovic wins the title.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பத்தாம் வகுப்பு - தமிழ்

பத்தாம் வகுப்பு - தமிழ்