பள்ளி - காலை வணக்கக் கூட்ட செயல்பாடுகள் - 03.02.2023, வெள்ளி

 03.02.2023, வெள்ளி

திருக்குறள்

ஒல்வது   அறிவது   அறிந்ததன்  கண்தங்கிச்

செல்வார்க்குச்  செல்லாதது இல்

பொருள்

தனக்குப் பொருந்தும் செயலையும், அதற்காக அறிய வேண்டியதையும் அறிந்து அதனிடம் நிலைத்து முயல்கின்றவர்க்கு முடியாதது ஒன்றும் இல்லை.

பழமொழி

Hunger is the best source

பசி ருசி அறியாது

பொன்மொழி

கால் தடுமாறினாலும் சமாளித்துக் கொள்ளலாம். நாக்கு தடுமாறினால் மீளவே முடியாது. - பிராங்க்ளின்.

பொதுஅறிவு

பஞ்சாப் கேசரி என்றழைப்பட்ட தேசிய தலைவர் யார்?

லாலா லஜபதிராய்

இன்றைய முக்கியச் செய்திகள்

* இளநிலை யோகா - இயற்கை மருத்துவப்படிப்பில் காலியாக உள்ள 421 இடங்களுக்கு வரும் 7 - ஆம் தேதி சிறப்பு கலந்தாய்வு. ஓமியோபதி துறை தகவல்.

* 50 ஆண்டுகளுக்குப் பின் தோன்றும் அபூர்வ பச்சை வால் நட்சத்திரத்தை வரும் 10 - ஆம் தேதி வரை காணலாம் என விஞ்ஞானி தகவல்.

* பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்திற்கு ஆதார் எண் கட்டாயம். தமிழக அரசு அறிவிப்பு.

* உலகெங்கும் உள்ள உயர்கல்வி நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட ஜி20 மாநாட்டில் முடிவு.

* தென்மாவட்டங்களில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Today's Headlines

* Special counselling for 421 vacant seats in Junior Yoga-Nephropathy course on 7th February. Department of Homeopathy Information

* The rare green comet that appears after 50 years can be seen till the 10th, according to the scientist.

Aadhaar number is mandatory for girl child protection scheme. Tamil Nadu Government Notification.

* Decision at G20 summit to collaborate with higher education institutions around the world.

 * The Chennai Meteorological Department has informed that there is a possibility of rain in the southern districts today and tomorrow.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பத்தாம் வகுப்பு - தமிழ்

பத்தாம் வகுப்பு - தமிழ்