பள்ளி - காலை வணக்கக் கூட்ட செயல்பாடுகள் - 07.02.2023, செவ்வாய்
07.02.2023, செவ்வாய்
திருக்குறள்
தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே
வேளாண்மை என்னும் செருக்கு
பொருள்
முயற்சி எனப்படும் உயர்ந்த குணத்தில்தான் பிறர்க்கு உதவுதல் என்னும் மேன்மை நிலைபெற்றிருக்கிறது.
பழமொழி
A single swallow cannot make a summer
தனிமரம் தோப்பாகாது
பொன்மொழி
அனைவரையும் நேசி. சிலரை மட்டும் நம்பு. ஒருவரைப் பின்பற்று. ஆனால் ஒவ்வொருவரிடம் இருந்தும் கற்றுக்கொள். - லெனின்.
பொதுஅறிவு
முல்லைப் பெரியாறு அணையைக் கட்டியவர் யார்?
ஜான் பென்னி குயிக்.
இன்றைய முக்கியச் செய்திகள்
* காலம் தவறி பெய்த கனமழையால் பயிர்கள் சேதம். விவசாயிகளுக்கு நிவாரண உதவியை அறிவித்தார் முதலமைச்சர்.
* 1951 ஆம் ஆண்டு முதல் இந்திய வாக்காளர் எண்ணிக்கை 6 மடங்காக உயர்ந்துள்ளது.
* பி.எச்.டி பட்டதாரிகளை உருவாக்குவதில் தமிழ்நாடு தொடர்ந்து முதலிடம்.
* சிரியா, துருக்கி, லெபனான் நாடுகளில் அதிபயங்கர நிலநடுக்கம். ரிக்டர் அளவுகோலில் 7.8 ஆக பதிவாகியுள்ளது.
* சர்வதேச மல்யுத்த போட்டியில் வெண்கலம் வென்றார் இந்திய வீரர் அஷீ.
Today's Headlines
* Damage to crops due to untimely heavy rains. Chief Minister
announced relief assistance to farmers.
* Since 1951, India's voter population has increased sixfold.
* Tamil Nadu continues to lead in producing Ph.D.
* Terrible earthquake in Syria, Turkey, Lebanon. It was recorded as 7.8 on the Richter scale.
* Indian wrestler Ashi won bronze in international wrestling competition.
கருத்துகள்
கருத்துரையிடுக