பள்ளி - காலை வணக்கக் கூட்ட செயல்பாடுகள் - 08.02.2023, புதன்

 08.02.2023, புதன்

திருக்குறள்

வினையால்  வினையாக்கிக்  கோடல்  நனைகவுள்

யானையால்  யானையாத்   தற்று

பொருள்

ஒரு செயலைச் செய்யும்போது அச்செயலால் மற்றொரு செயலையும் செய்து முடித்துக்கொள்ளல், ஒரு யானையால் மற்றொரு யானையைப் பிடித்தலைப் போன்றது.

பழமொழி

A Guilty conscience needs no Accuser

குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்

பொன்மொழி

தன் வலிமையைக் கணித்த பிறகே செயலில் இறங்க வேண்டும்.

பொதுஅறிவு

இந்தியாவின் மிக அதிவேக இரயில் எது?

வந்தே பாரத்.

இன்றைய முக்கியச் செய்திகள்

* தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் 4 சான்றிதழ் படிப்புகள் நான்கு டிப்ளமோ படிப்புகள் அறிமுகம்.

* மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்காவிட்டால் 15 ஆம் தேதிக்குப் பிறகு மின் கட்டணம் செலுத்த முடியாது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

* பொருளாதாரத்தில் நலிவடைந்த 120 மாணவர்களுக்கு ரூபாய் 39.20 லட்சம் கல்வி உதவித்தொகையை வழங்கினார் முதலமைச்சர்.

* புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் அருகே 9 ஆம் நூற்றாண்டைச் சார்ந்த தர்மச் சக்கர தூண் கண்டுபிடிப்பு.

* தமிழகம் முழுவதும் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் தொடங்கியது: அனைவரும் கலந்து கொள்ளும் வகையில் 24 ஆம் தேதி வரை போட்டிகள் நடைபெறும்.

Today's Headlines

* Introduction of 4 Certificate Courses 4 Diploma Courses in Tamil Nadu Agricultural University.

* Officials have said that if the Aadhaar number is not linked with the electricity connection, the electricity bill cannot be paid after the February 15th.

* The Chief Minister gave Rs 39.20 lakh education scholarship to 120 economically weaker students.

* Discovery of 9th century Dharmachakra pillar near Avudaiyar temple, Pudukottai district.

*Sports competitions for Chief Minister's Cup have started across Tamil Nadu: Competitions will be held till the 24th for everyone to participate.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பத்தாம் வகுப்பு - தமிழ்

பத்தாம் வகுப்பு - தமிழ்