பள்ளி - காலை வணக்கக் கூட்ட செயல்பாடுகள் - 09.02.2023, வியாழன்
09.02.2023, வியாழன்
திருக்குறள்
உறங்குவது போலும் சாக்காடு உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு
பொருள்
மரணம் என்பது தூங்குவது போன்றதாகும்.
பிறப்பு என்பது தூங்கி விழிப்பது போன்றதாகும்.
பழமொழி
A Hasty man never wants woe.
ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு
பொன்மொழி
மதிப்புடன் வாழ்ந்த மனிதனுக்கு நேரும் அவமானம் மரணத்தை விட கொடுமையானது. - மகாகவி பாரதியார்.
பொதுஅறிவு
இந்தியாவின் கவிக்குயில் என்று அழைக்கப்படுபவர் யார்?
சரோஜினி நாயுடு
இன்றைய முக்கியச் செய்திகள்
* புதுமைப் பெண் திட்டத்தால் பெண்களின் உயர்கல்வி சேர்க்கை 27 சதவீதம் அதிகரித்துள்ளதாக முதலமைச்சர் கூறியுள்ளார்.
* 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வு வழிகாட்டுதல்கள் பள்ளிக்கல்வித் துறையால் அறிவிக்கப்பட்டுள்ளது.
* ஜே.இ.இ முதல்நிலைத் தேர்வில் 100 மதிப்பெண்கள் பெற்று 20 மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
* பால் உற்பத்தியில் கடந்த 8 ஆண்டுகளில் 51 சதவீதம் அதிகரித்து இந்தியா உலகளவில் முதலிடத்தில் உள்ளது.
* இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கான பார்டர்-காவஸ்கர் டெஸ்ட் தொடர் இன்று நாகபுரியில் தொடங்குகிறது.
Today's Headlines
* The Chief Minister said that the enrollment of women in
higher education has increased by 27 percent due to the Innovation Women
Program.
* 20 students have achieved a record by scoring 100 marks in
JEE Prelims.
* India is the world leader in milk production with an
increase of 51 percent in the last 8 years.
கருத்துகள்
கருத்துரையிடுக