13.02.2023, திங்கள்
திருக்குறள்
எல்லைக்கண் நின்றார்
துறவார் தொலைவிடத்தும்
தொல்லைக்கண் நின்றார்
தொடர்பு
பொருள்
நட்பு என்ற வரம்பைக்
கடவாமல் நிற்பவர்கள், தமக்கு அழிவு வந்தாலும் பழைய நண்பரைக் கைவிட மாட்டார்கள்.
பழமொழி
The face is index
of the mind
அகத்தின் அழகு முகத்தில்
தெரியும்
பொன்மொழி
எந்தச் செயலைச் செய்தாலும்
பேசினாலும் உங்கள் மனதைச் சாட்சியாக வையுங்கள். உங்கள் மனசாட்சி உங்களை எப்போதும் நல்வழிப்படுத்தும்.
பொதுஅறிவு
மாணவர்களுக்கு தேர்வுகள்
இல்லாத நாடு எது?
பின்லாந்து
இன்றைய முக்கியச் செய்திகள்
* புதுக்கோட்டை
மாவட்டம் பொற்பனைக்கோட்டை அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி - தொல்லியல்
ஆய்வாளர்கள் மகிழ்ச்சி.
* இல்லம்
தேடி கல்வித் திட்டத்தை தமிழக அரசு தொடர வேண்டும்: மாநில திட்டக்குழுவின்
மதிப்பீட்டு அறிக்கையில் பரிந்துரை.
* இன்னும்
2 மாதங்களில் மக்கள் தொகையில் சீனாவை இந்தியா பின்னுக்குத்
தள்ளிவிடும் என ஐ.நா நிபுணர் குழு தெரிவித்துள்ளது.
* மகளிர்
டி20 உலக கோப்பை: பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி வெற்றி.
* ஆசிய
தடகள சாம்பியன்ஷிப்பில் இந்திய வீரர் தஜீந்தர்பால் சிங் தூர் தங்க பதக்கம் வென்று
உள்ளார்.
Today's Headlines
* Pudukottai
District Polpanaikottai Excavation Granted by the Central Government -
Archaeologists are happy.
* Tamil Nadu Govt
to continue Illam thedi kalvi Scheme
Recommended in State Planning Commission's Evaluation Report.
* India will
overtake China in terms of population in 2 months, UN expert panel has said.
* Women's T20 World
Cup: India beat pakistan
* Indian athlete
Tajinderpal Singh Dhoor has won the gold medal in the Asian Athletics
Championships.
கருத்துகள்
கருத்துரையிடுக