பள்ளி - காலை வணக்கக் கூட்ட செயல்பாடுகள் - 15.02.2023, புதன்
15.02.2023, புதன்
திருக்குறள்
உள்ளியது எய்தல் எளிதுமன் மற்றும்தான்
உள்ளியது உள்ளப் பெறின்
பொருள்
ஒருவன் தான் செய்ய நினைத்ததை மறக்காமல் எண்ணிச் செய்தால் அவன் அடைய நினைத்த பொருளை நினைத்தபடியே அடைவான்.
பழமொழி
Necessity knows no law.
ஆபத்துக்குப் பாவமில்லை.
பொன்மொழி
பலவீனமானவர்களால் மன்னிக்கவே முடியாது. மன்னிப்பு என்பது வலிமையானவர்களின் பண்பு. - மகாத்மா காந்தி.
பொதுஅறிவு
தமிழகத்தில் வரையாடு தினம் என்று அனுசரிக்கப்படுகிறது?
அக்டோபர் 7
இன்றைய முக்கியச் செய்திகள்
* சென்னை காந்தி மண்டபத்தில் மருதுபாண்டியர்கள், வ.உ.சிதம்பரனார், வீரபாண்டிய கட்டபொம்மன் ஆகியோரது சிலைகளை திறந்து வைத்தார் தமிழக முதலமைச்சர்.
* மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க இன்று கடைசி நாள். மேலும் கால அவகாசம் நீட்டிக்கப்படாது என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
* குரூப் 4 தேர்வு முடிவுகள் மார்ச் மாதத்தில் வெளியாகும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.
* பெண்கள் உலகக் கோப்பை கிரிக்கெட்:
நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றி.
* ஐசிசியின் ஜனவரி மாதத்திற்கான சிறந்த வீரராக இந்தியாவின் சுப்மன் கில் தேர்வு.
Today's Headlines
* The Chief
Minister of Tamil Nadu inaugurated the statues of Marutubandiyas, VA.VU.Chitambaranar
and Veerapandiya Kattabomman at Gandhi Mandapam in Chennai.
* Today is the last day to link Aadhaar number with electricity connection. Officials informed that the period will not be extended.
* The Tamil Nadu Public Service Commission has announced that the Group 4 exam results will be released in March.
* Women's Cricket World Cup: South Africa beat New Zealand
* India's Subman Gill named ICC Player of the Month for January
கருத்துகள்
கருத்துரையிடுக