பள்ளி - காலை வணக்கக் கூட்ட செயல்பாடுகள் - 16.02.2023, வியாழன்

16.02.2023, வியாழன்

திருக்குறள்

கல்லாதான்  ஒட்பம்  கழியநன்று  ஆயினும்

கொள்ளார்  அறிவுடை  யார்

பொருள்

கல்லாதவன் அறிவு மிக நன்றாக இருப்பினும் அறிவுடையார் அதனை அறிவாகக் கொள்ள மாட்டார்கள்.

பழமொழி

Don't add fuel to the fire

எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றாதே

பொன்மொழி

மற்றவர்களை அன்பால் மகிழச் செய்வதே ஒருவன் பெற்றிருக்க வேண்டிய பாக்கியங்களில் எல்லாம் மேலான பாக்கியம். - செஸ்டர் பீல்டு.

பொதுஅறிவு

தமிழக அரசு சின்னத்தில் இருப்பது எந்த கோவில்?

ஸ்ரீவில்லிபுத்தூர்.

இன்றைய முக்கியச் செய்திகள்

* மின் இணைப்பை ஆதார் எண்ணுடன் இணைக்க இம்மாதம் 28 ஆம் தேதி வரை காலக்கெடு நீட்டிப்பு.

* நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள துருக்கியில் மீட்புப் பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன.

* சி.பி.எஸ்.இ பத்து மற்றும் பன்னிரண்டு வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் நேற்று தொடங்கின.

* ஆதாருடன் இணைக்காவிட்டால் ஏப்ரல் 1 ஆம் தேதியில் இருந்து பான்கார்டு செல்லாது என மத்திய நேரடி வரிகள் வாரியம் அறிவிப்பு,

* 2026 ஆம் ஆண்டுக்குள் துபாயில் பறக்கும் டாக்சிகள் அறிமுகம் என பிரதமர் அறிவிப்பு.

* மகளிர் உலகக் கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தியது இந்திய அணி.

Today's Headlines

* Extension of deadline till 28th of this month for linking electricity connection with Aadhaar number.

* Rescue operations have reached their final stages in earthquake-hit Turkey.

* CBSE general exams for class 10 and 12 started yesterday.

* Central Board of Direct Taxes notification that Bancard will be invalid from April 1 if not linked with Aadhaar.

* Prime Minister announced that flying taxis will be introduced in Dubai by 2026.

 * Indian team beat West Indies in Women's World Cup 20 Over cricket match.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பத்தாம் வகுப்பு - தமிழ்

பத்தாம் வகுப்பு - தமிழ்