பள்ளி - காலை வணக்கக் கூட்ட செயல்பாடுகள் - 17.02.2023, வெள்ளி

 17.02.2023, வெள்ளி

திருக்குறள்

தன்னுயிர்  நீப்பினும்  செய்யற்க  தான்பிறிது

இன்னுயிர்  நீக்கும்  வினை.

பொருள்

தனது உயிரே போவதானாலும் பிறவற்றின் உயிரை நீக்கும் செயலைச் செய்யக்கூடாது.

பழமொழி

Bare words buy no barley.

ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது.

பொன்மொழி

உன்னை சுற்றியுள்ளவர்களை நீ மாற்றியமைக்க முடியாது. ஆனால் உன்னைச் சுற்றி யார் இருக்க வேண்டும் என்பதை நீ மாற்றியமைக்கலாம்.

பொதுஅறிவு

தமிழகத்தில் பள்ளி மாணவர்கள் நாட்டுப் பற்றுடன் ஒழுக்கத்திலும் கல்வியிலும் சிறந்த விளங்கிட தொடங்கப்பட்ட திட்டத்தின் பெயர் என்ன?

சிற்பி

இன்றைய முக்கியச் செய்திகள்

* மக்கள் வழங்கும் மனுக்களைக் காகிதமாகப் பார்க்காமல் அவர்களின் வாழ்வாதரமாகப் பார்க்க வேண்டும் என அதிகாரிகளிடம் முதலமைச்சர் பேச்சு.

* எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கான என்.எம்.எம்.எஸ் தேர்வுக்கான நுழைவுச் சீட்டை இன்று முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.

* பழங்குடியினர் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் டெல்லியில் தேசிய பழங்குடியின திருவிழாவைத் தொடங்கி வைத்தார் பிரதமர்.

* குரூப் 2, குருப் 2 எ மெயின் தேர்வுக்கான நுழைவுச் சீட்டை வெளியிட்டது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்.

* அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளராக போட்டியிட உள்ளதாக இந்திய வம்சாவளியைச் சார்ந்த நிக்கி ஹாலே அறிவித்துள்ளார்.

* இந்திய ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் இன்று தொடங்குகிறது.

Today's Headlines

* Chief Minister's speech to the officials that the petitions submitted by the people should not be seen as paper but as their livelihood.

* The school education department has announced that the admit card for NMMS examination for class VIII students can be downloaded from today.

* The Prime Minister inaugurated the National Tribal Festival in Delhi to reflect the tribal culture.

* Tamil Nadu Public Service Commission has released the admit card for Group 2, Group 2 A Mains exam.

* Indian-origin Nikki Haley has announced her intention to run as the Republican Party candidate in the US presidential election.

* The second Test cricket match between India and Australia starts today at Delhi's Arun Jaitley Stadium.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பத்தாம் வகுப்பு - தமிழ்

பத்தாம் வகுப்பு - தமிழ்