பள்ளி - காலை வணக்கக் கூட்ட செயல்பாடுகள் - 20.02.2023, திங்கள்
20.02.2023, திங்கள்
திருக்குறள்
கலங்காது கண்ட வினைக்கண் துளங்காது
தூக்கம் கடிந்து செயல்
பொருள்
மனம் கலங்காமல் ஆராய்ந்து துணிந்து ஏற்ற தொழிலைச் சோர்வு கொள்ளாமல் காலம் தாழ்த்தாமல் செய்து முடிக்க வேண்டும்.
பழமொழி
Every cloud has a silver lining.
தீமையிலும் நன்மை உண்டு.
பொன்மொழி
இரக்கம் மட்டும் இருந்தால் என்ன பயன்? எண்ணியபடி உதவி செய்ய வேண்டுமெனற உறுதி இல்லாதபோது இரக்கம் பயன்படுவதே இல்லை.
பொதுஅறிவு
சென்னை மாநகராட்சியின் முதல் பெண் மேயர் யார்?
தாரா செரியன்
இன்றைய முக்கியச் செய்திகள்
* கோவை ஈஷா யோகா மையத்தில் நடைபெற்ற சிவராத்திரி விழாவில் ஜனாதிபதி மாண்புமிகு திரவுபதி முர்மு பங்கேற்றார்.
* தமிழ்க் கருவூலங்களை அச்சில் ஏற்றி காலத்தால் அழியாதிருக்கும் கொடை செய்த தமிழ்த் தாத்தா உ.வே.சா என முதலமைச்சர் புகழாரம்.
* தமிழகத்தில் முதன்முறையாக நீலகிரி மாவட்டத்தில் கியூஆர் கோடு மூலம் ரேஷன் கடைகளில் பணம் செலுத்தும் வசதி அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
* 3500 அரசுப் பள்ளி மாணவர்கள் இணைந்து தயாரித்த இந்தியாவின் முதல் ஹைபிரிட் ராக்கெட் 150 செயற்கைக் கோள்களுடன் ஏவப்பட்டது.
* ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியா அபார வெற்றி பெற்றது.
Today's Headlines
* President Hon'ble Drarubathi Murmu participated in the maha Shivratri
function held at Isha Yoga Centre, Kovai.
* The chief minister praised VU.VE.Swaminathar as the grandfather of Tamil who made a timeless gift by printing Tamil treasures.
* For the first time in Tamil Nadu, Nilgiri district has introduced payment facility through QR code at ration shops.
* India's first hybrid rocket launched with 150 satellites by 3500 government school students.
* India won the second Test against Australia.
கருத்துகள்
கருத்துரையிடுக