பள்ளி - காலை வணக்கக் கூட்ட செயல்பாடுகள் - 21.02.2023, செவ்வாய்
21.02.2023, செவ்வாய்
திருக்குறள்
வெண்மை எனப்படுவது யாதெனின் ஒண்மை
உடையம்யாம் என்னும் செருக்கு
பொருள்
அறியாமை என்று சொல்லப்படுவது எது என்றால் தம்மைத் தாமே அறிவுடையோம் என்று சொல்லிக்கொள்ளும் கர்வமேயாகும்.
பழமொழி
Misfortune tells us what fortune is.
நிழலின் அருமை வெயிலில் தெரியும்.
பொன்மொழி
ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ அப்படி எல்லோரிடமும், தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும். - தந்தை பெரியார்.
பொதுஅறிவு
இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் (இஸ்ரோ) தலைவர் யார்?
டாக்டர் கே.சிவன்
இன்றைய முக்கியச் செய்திகள்
புதிய கல்விக் கொள்கை மூலம் புதிய நூற்றாண்டுக்கான இளைஞர்களை தயார்படுத்த நாடு உறுதிபூண்டுள்ளதாக பிரதமர் பேச்சு.
நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு புதிய மனு தாக்கல்.
விற்பனை அதிகரிப்பால் தினமும் 60 லட்சம் லிட்டர் பால் பதப்படுத்தும் வசதியை மேம்படுத்த ஆவின் திட்டம்.
மகளிர் உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டியில் அயர்லாந்தை வென்றது இந்திய அணி.
Today's Headlines
The Prime Minister said that the country is committed to
prepare the youth for the new century through the new education policy.
Tamilnadu government filled a new petition in supreme court seeking exemption from NEET examination.
60 lakz liter milk processing facility per day due to increase in sales aawin plans upgrade infrastructure.
கருத்துகள்
கருத்துரையிடுக