பள்ளி - காலை வணக்கக் கூட்ட செயல்பாடுகள் - 24.02.2023, வெள்ளி

 24.02.2023, வெள்ளி

திருக்குறள்

உடையர்   எனப்படுவது  ஊக்கம்அஃது  இல்லார்

உடையது  உடையரோ  மற்று.

பொருள்

செல்வம் உடையவர் என்போர் ஊக்கமுடையவரே ஆவார். ஊக்கமில்லாதவர் வேறு பொருள்களைப் பெற்றிருந்தாலும் உடையவர் ஆக மாட்டார்.

பழமொழி

In Fair weather prepare for foul

மழைக்கு முன் குடையைச் சீர் செய்.

பொன்மொழி

நீ செய்யும் நற்செயல் உன் வாழ்க்கையில் சிலவற்றை மாற்றும்.

நீ செய்யும் தீய செயல்கள் உன் வாழ்க்கையே மாற்றும்.

பொதுஅறிவு

தென்னாப்ரிக்காவில் வாழ்ந்த இந்தியர்களின் உரிமைக்குப் போராடிய தமிழ்ப் பெண்மணி யார்?

தில்லையாடி வள்ளியம்மை.

இன்றைய முக்கியச் செய்திகள்

* உலக மகளிர் தினமான மார்ச் 8-ம் தேதி தமிழ்நாடு மாநில மகளிர் கொள்கையை வெளியிட தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதில் மகளிர் மேம்பாடு, பாதுகாப்பு தொடர்பான பல்வேறு அம்சங்கள் இடம் பெறவுள்ளன.

* சென்னை, புறநகரில் வேகமாக பரவும் வைரஸ் காய்ச்சல்: ரூ.12 ஆயிரம் வரை பரிசோதனைக்காக செலவிடும் மக்கள்.

* இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் ஊடுருவல்களை தடுக்க ஸ்மார்ட் தடுப்பு வேலி அமைக்கும் பணி தீவிரம்.

* பள்ளியில் முதல் வகுப்பில் குழந்தையை சேர்ப்பதற்கு 6 வயது இருக்க வேண்டும் - மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவு.

* '3000 ஆண்டுகளுக்கு முன்பே மூளையில் அறுவை சிகிச்சை’ - வியப்பில் இஸ்ரேல் ஆய்வாளர்கள்.

* 20 ஓவர் கிரிக்கெட் பேட்டிங் தரவரிசை - சூர்யகுமார் யாதவ் முதலிடம்.

Today's Headlines

 * Tamil Nadu Government has decided to release the Tamil Nadu State Women's Policy on International Women's Day, March 8.  It will include various aspects related to women's development and security.

 * Rapidly spreading viral fever in suburbs of Chennai: People spend up to Rs 12 thousand for testing.

 * Intensification of construction of smart fence along India-Pakistan border to prevent infiltration.

* 6 years of age to enroll a child in the first class of school – Central Government directive to the states.

 * 'Brain surgery 3000 years ago' - amazed Israeli researchers.

* 20 Over Cricket Batting Rankings - Suryakumar Yadav tops.



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பத்தாம் வகுப்பு - தமிழ்

பத்தாம் வகுப்பு - தமிழ்