பள்ளி - காலை வணக்கக் கூட்ட செயல்பாடுகள் - 28.02.2023, செவ்வாய்
28.02.2023, செவ்வாய்
திருக்குறள்
உண்ணாமை உள்ளது உயிர்நிலை ஊன்உண்ண
அண்ணாத்தல் செய்யாது அளறு
பொருள்
ஊன் உண்ணாமையால் தான் உயிர்கள் உடம்போடு நிலைபெற்று வாழ்கிறது. ஊன் உண்பவனின் உடலைத் தின்ன நரகமும் வாய் திறக்காது.
பழமொழி
As you sow, so you reap.
வினை விதைத்தவன் வினை அறுப்பான்.
பொன்மொழி
அதிகாலை நீ நினைத்த நேரத்தில் எழுந்துவிட்டாலே தோல்விகள் உன்னை விட்டு ஒதுங்கிக்கொள்ளும் - அப்துல் கலாம்.
பொதுஅறிவு
காகித மடிப்புக் கலையின் பெயர் என்ன?
ஓரிகாமி
இன்றைய முக்கியச் செய்திகள்
* மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க இன்று கடைசி நாள்.
* 10, 11, 12 அரசு பொதுத்தேர்வுகளுக்கு 200 கூடுதல் மையங்களை ஒதுக்க தேர்வுத்துறை நடவடிக்கை.
* 13 வது தவணையாக ரூபாய் 16,800 கோடி விவசாய நிதி உதவியை பிரதமர் நேற்று விடுவித்தார்.
* கோடைக்காலம் தொடங்கியதால் தமிழ்நாட்டில் மின்சாரப் பயன்பாடு 1,000 மெகாவாட் அதிகரித்துள்ளது.
* சென்னை திருவெற்றியூரில் கேந்திர வித்யாலயா பள்ளி தொடங்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் தகவல்.
* உலக குத்துச் சண்டை தொடரில் இந்தியா 3 வெள்ளிப் பதக்கங்களை வென்றுள்ளது.
Today's Headlines
* Today is the last day to link Aadhaar number with
electricity connection.
* School Examination department action to allot 200 additional centers for 10th, 11th, 12th state board exams.
* The Prime Minister released the 13th installment of Rs 16,800 crore agricultural financial assistance yesterday.
* Electricity consumption in Tamil Nadu has increased by 1,000 Mega Watt as summer season has started.
* Member of Parliament informs that Kendra Vidyalaya school will be started in Tiruvettiyur, Chennai.
* India has won 3 silver medals in World Boxing Series.
கருத்துகள்
கருத்துரையிடுக