பள்ளி - காலை வணக்கக் கூட்ட செயல்பாடுகள் - 01.03.2023, புதன்
01.03.2023, புதன்
திருக்குறள்
கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு
மாடல்ல மற்ற யவை.
பொருள்
ஒருவனுக்கு அழிவு இல்லாத சிறந்த செல்வம் கல்வியே ஆகும். கல்வி தவிர மற்றவை செல்வம் அல்ல.
பழமொழி
Don't look a gift horse in the mouth
தானமாக வந்த மாட்டை பல்லைப் பிடித்துப் பதம் பார்க்காதே.
பொன்மொழி
எவன் மற்றவர்களைப் பார்த்து மகிழ்ச்சி கொள்ளவில்லையோ, அவனால் நல்ல செயல்கள் எதையும் செய்ய முடியாது.
பொதுஅறிவு
உலக அளவில் மின்சாரம் தயாரிக்கும் நாடுகளில் இந்தியா எத்தனையாவது இடத்தில் உள்ளது?
மூன்றாவது இடத்தில்.
இன்றைய முக்கியச் செய்திகள்
ரூபாய் 1,136 கோடி செலவில் 44 மருத்துவமனைகளுக்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்.
பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கு செய்முறைத் தேர்வுகள் இன்று தொடங்குகிறது.
இந்தியாவில் 119 மாவட்டங்களில் வெப்பநிலை அதிகரித்துள்ளதாக இந்திய வானிலை மையம் தகவல்.
ஜீ - 20 மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்தியா வருகிறார் சீன வெளியுறவுத் துறை அமைச்சர்.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே மூன்றாவது டெஸ்ட் போட்டி இன்று தொடங்குகிறது.
Today's Headlines
* The Tamil Nadu Chief Minister laid the foundation stone for 44
hospitals at a cost of Rs 1,136 crore.
கருத்துகள்
கருத்துரையிடுக