பள்ளி - காலை வணக்கக் கூட்ட செயல்பாடுகள் - 02.03.2023, வியாழன்
02.03.2023, வியாழன்
திருக்குறள்
மறத்தல் வெகுளியை யார்மாட்டும் தீய
பிறத்தல் அதனான் வரும்
பொருள்
யாவரிடத்திலும் கோபம் கொள்ளுதலை மறந்து விட வேண்டும். ஏனெனில் தீமைகள் எல்லாம் கோபத்தால் தான் வருகின்றன.
பழமொழி
A rolling stone gathers no moss.
துள்ளுகிற மாடு பொதி சுமக்காது.
பொன்மொழி
நீங்கள் போதுமான அளவில் தோல்வி அடையவில்லை எனில், புதுமையான செயல்களை சோதனை செய்யவில்லை என்று அர்த்தம்.
பொதுஅறிவு
சிப்பியில் முத்துகள் உருவாக எத்தனை ஆண்டுகள் ஆகும்?
15 ஆண்டுகள்.
இன்றைய முக்கியச் செய்திகள்
* ஆசிரியர்களின் நலனைக் காக்க ரூபாய் 225 கோடியில் தமிழக அரசு புதிய திட்டங்களை அறிவித்துள்ளது.
* வானில் நேற்று ஒரே நேர்க்கோட்டில் வியாழன், வெள்ளி தோன்றிய அதிசய நிகழ்வு நடந்தது.
* ரஷ்யாவிடமிருந்து மூன்றாவது கட்டமாக எஸ்400 ஏவுகணை தொகுப்பு இந்திய வந்தடைந்தது.
* ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் இந்திய வீரர் அஸ்வின் முதல் இடத்திற்கு முன்னேற்றம்.
Today's Headlines
* Tamil Nadu government has announced new schemes worth Rs
225 crore to protect the welfare of teachers.
* The miraculous event of Jupiter and Friday appearing in the same straight line in the sky took place yesterday.
* Third batch of S400 missile package arrived in India from Russia.
கருத்துகள்
கருத்துரையிடுக